யக்ஞோபவீதம் – பூணூல்
யக்ஞோபவீதம் – பூணூல், சர்மா சாஸ்திரிகள், பக். 80, விலை 60ரூ.
காஞ்சி மடத்துடன் அதிக தொடர்பு கொண்டவரும், முன்பு சங்கபரிவார் அமைப்புகளுடன் இருந்தவருமான ஆசிரியர், தற்போது இந்த நூலை வெளியிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் பிராமணர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக பூணூல் பற்றி தகவல்களை கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பிரிவினர் பூணூல் அணிகின்றனர். திருமூலர் நூலது காற்பாசம் : நுண்சிகை ஞானம் என்பார். பூணூலின் இலக்கணம் என்ன, வேதத்தில் பூணூல் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது, பூணூலை இலக்கணம் என்ன, வேதத்தில் பூணூல் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது, பூணூலை மூன்று விதமாக அணிந்து கொள்ளுதல் பற்றிய விவரங்கள், பூணூல் போட்ட பிறகு, நமஸ்காரம், அபிவாதனம் செய்வது எப்படி, பூணூல் மாற்றுவது, அதை பராமரிப்பது தொடர்பாக ஏற்படும் பொதுவான சந்தேகங்கள் குறித்த கேள்வி – பதில், பூணூலை மாற்றிக் கொள்ளும் விதிகள், உபநயனம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துகள் ஆகிய தலைப்புகளில், நூலாசிரியர் எழுதி உள்ளார். இந்த தலைப்புகள், நூலின் பிற்பகுதியில் முழுமையாக ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. -பாண்டியன். நன்றி: தினமலர், 9/8/2015.