விடுதலை வீரர் மருது பாண்டியர்கள்
விடுதலை வீரர் மருது பாண்டியர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, சென்னை, விலை 250ரூ.
தமிழகத்தின் சிவகங்கை சீமையிலிருந்து ஆங்கிலேயரை மண்டியிட வைத்த வீர மறவர்கள் மருது பாண்டியர்கள் பற்றிய வரலாற்று நாவல். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பிள்ளையார் சுழி போட்டவன் பூலித்தேவன், மறவர் நாட்டு மண்டேலா முத்துராமலிங்க சேதுபதி, கட்டபொம்மனோடு சேர்ந்து போரிட்டு களப் பலியானவர் வெள்ளையத்தேவன். களத்தில் கணவனை இழந்த பின்னும் களம் பல கண்டு வெள்ளையரோடு போராடி வெற்றி கொண்டவள் வீர மங்கை வேலு நாச்சியார். இவரது வெற்றிக்கு வாளாகவும், கேடயமாகவும் விளங்கிய விடுதலைப் போராட்டத்தினர் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று தூக்கில் மடிந்தவர்கள் மருது பாண்டியர்கள். இவ்வகையில் நெற்கூட்டுஞ்செவலும், ராமநாதபுரமும், பாஞ்சாலங்குறிச்சியும், சிவகங்கைச் சீமையும் தென்னாட்டு தீரத்தலங்கள். இவற்றில் சிவகங்கைச் சீமையின் வீர வரலாற்றை நாவல் வடிவில் ஆக்கியுள்ளார் நூலாசிரியர் மதுரை இளங்கவியன். நன்றி: தினத்தந்தி, 19/11/2014.
—-
உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம், டாக்டர் எஸ். கார்த்திகேயன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 150ரூ.
எல்லோரும் பணம் சம்பாதிக்கும் ஆசையில்தான் வேலை செய்கிறார்கள். வியாபாரம் செய்கிறார்கள். பெரிய பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், சிலர் ஆழம் தெரியாமல் காலை விடுவது உண்டு. பெரிய ரிஸ்க் எடுக்காமல் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 19/11/2014.