வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை
வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை, ப.செந்தில் நாயகம், பதிப்புத்துறை வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், விலை 70ரூ.
சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் வீரவரலாற்றைக் கூறும் நூல். வ.உ.சி.யின் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, ஆன்மிக வாழ்க்கை ஆகியவற்றை திரளான சான்றுகளுடன் முனைவர் ப.செந்தில் நாயகம் திரட்டித் தந்திருக்கிறார். வ.உ.சி.யின் விடுதலை வாழ்க்கை, தொழிற்சங்க வாழ்க்கை, சிறை வாழ்க்கை, விடுதலைக்குப் பிறகு அவரது சைவத் தொடர்புகள், சிறையிலும் வெளியிலுமான அவரது இலக்கிய பங்களிப்பு, இறுதி நாட்களில் அவர் வறுமையில் வாடியபோதிலும் தமிழ் இலக்கிய இலக்கண உலகிற்கு வ.உ.சி. ஆற்றிய பணி போன்றவற்றை சுவைபட எடுத்துச் சொல்கிறார். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.
—-
நாரதர் புராணம், மல்லசமுத்திரனும் செங்கோடனும், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 65ரூ. நாரதர் என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாரதரின் வரலாறு பலருக்குத் தெரியாது. நாரதரைப் பற்றிய முழு விவரங்களையும் இதில் சுவைபடக் கூறுகிறார்கள் மல்லசமுத்திரனும் செங்கோடனும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.