ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மனிதனின் நிரந்தரத் தேடல்

மனிதனின் நிரந்தரத் தேடல் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 1, விலை 150 ரூ.

நான் தியானம் செய்ய ஆரம்பித்த போது அதில் இவ்வளவு ஆனந்தம் காண்பேன் என நான் ஒருபோதும் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல எவ்வளவு அதிகமாக நான் தியானித்தேனோ அவ்வளவு எனது அமைதியும், ஆனந்தமும் அதிகரித்தன’ என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வதைப் பற்றிய சொற்பொழிவுகள், கட்டுரைகளின் தொகுப்பை அண்மையில கொல்கத்தாவிலுள்ள ‘யோகோதா சத்தங்க சொஸைட்டி அஃப் இந்தியா’ எளி தமிழில் அழகாக வெளியிட்டிருக்கிறது. சிறுசிறு தலைப்புகளில் ‘தியானமே பணியின் உயர்ந்த வடிவம்’, ‘புன்சிரிப்பின் சக்தி’ போன்று முன்னூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிந்தனைகளைத் தந்திருக்கிறார்கள். ’நீங்கள் சிரிக்க முடியாது என்று உங்களுக்குத் தோன்றினால், ஒரு கண்ணாடி முன்பு நின்று உங்கள் விரல்களால் உங்கள் வாயை இழுத்துப் புன்சிரிப்பாக மாற்றுங்கள்’ என்று புன்னகையின் சிறப்பியல்பை வலியுறுத்துகிறார் சுவாமி. ‘ஒவ்வொரு நாளும் நீங்கள் முந்தைய நாளில் இருந்ததைவிட மேலான மனிதராக உங்களைக் காணவில்லையெனில் நீங்கள் உடல்நலம், மனஅமைதி, ஆன்ம ஆனந்தம் ஆகியவற்றின் பின்னே செல்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள் என்கிறார் கோகானந்தர். ‘எல்லா மதங்கள் மீதான உங்கள் மதிப்பையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் பெருக்கச் செய்வதற்காகச் செல்லுங்கள். ஒவ்வொன்றையும் நம் இறைவனாக பாவியுங்கள்’ என்பது பரமஹம்ஸ யோகானந்தரின் சர்வசமய நோக்கிலான அருளுரை. மனித மனங்களை மேம்படுத்தக்கூடிய ஆழமான சிந்தனைகளைக் கொண்ட இந்த அரிய நூலை (Man’s External Quest) தமிழாக்கியிருப்பவர் யாரென்று குறிப்பிடப்படவில்லை. அழகான எளிமையான தமிழாக்கத்துக்காக அவரைப் பாராட்ட வேண்டுவது அவசியம்.

– சுப்ர. பாலன், கல்கி 9-9-2012

Leave a Reply

Your email address will not be published.