இனி விதைகளே பேராயுதம்
இனி விதைகளே பேராயுதம், கோ. நம்மாழ்வார், இயல்வாகை பதிப்பகம், 25, மாந்தோப்பு, ப.உ.ச. நகர், போளூர் சாலை, திருவண்ணாமலை 1, பக்கங்கள் 96, விலை ரூ 60. இயற்கை உழவாண்மையின் கட்டாயத் தேவைபற்றி கூறும் புத்தகம். நம்மாழ்வாரின் சிந்தனைகள் எளிய தமிழில் மின்னுகின்றன. பூச்சிக்கொல்லிகள் சர்வசாதாரணமாக உபயோகப்படும் விதத்தில் மனிதர்களுக்கு நேரும் அபாயம், மரபு முறை வேளாண்மையை மறுக்கும் இன்றைய விசாயிகள், பச்சைப்புரட்சியில் ஏற்படும் லாபங்கள் என எல்லாவற்றுக்கும் அருமையான பதில்கள் தருகிறார். இயற்கையை எப்படி நாம் குலைக்காமல் இருக்க வேண்டும், நன்மை தரும் பூச்சிகள் அழிவதால் ஏற்படும் சிக்கல்கள் எனத் தகவல்கள் நிரம்பி வழிகின்றன. உடன் உரையாடுவது போன்ற தொனி, புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்கத் தோன்றுகிறது. ஆனந்த விகடன், 01/08/12