ரெபிடெக்ஸ் கம்ப்யூட்டர் கோர்ஸ்
ரெபிடெக்ஸ் கம்ப்யூட்டர் கோர்ஸ், இ.ராமநாதன், ரெபிடெக்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 220 ரூ.
கம்ப்யூட்டர், லேப்டாப், இன்டர்நெட், போன்றவற்றின் பயன்பாடுகளை அறியாமல், இனி எந்தவொரு இளைய தலைமுறையினராலும் எதிர்காலத்தை எதிர்கொள்வது என்பது மிகக் கடினம். அந்த அளவுக்கு இவற்றின் ஆதிக்கம் உள்ளது. அதே சமயம், இவற்றைப் பயன்படுத்த ஓரளவுக்கு ஆங்கில அறிவும், விஷய ஞானமும், பயிற்சியும் தேவை. ஆயினும் ஆங்கிலம் தெரியாதவர்களும் கம்ப்யூட்டரை பயன்படுத்தும் இலகுவான பயிற்சி முறையை எளிய தமிழில் இந்நூல் விளக்குகிறது. கம்ப்யூட்டர் என்றால் என்ன என்ற ஆரம்பப் பாடம் முதல், அதன் ஒவ்வொரு பாகங்களின் செயல்பாடு, அவற்றைச் செயல்படுத்தும் முறை என்று தொடர்ந்து, கம்ப்யூட்டரை வாங்குவதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய குறிப்புகள் வரை அனைத்தும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. அடுத்து ‘விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்.பி’ போன்றவை குறித்து மட்டும் 100 பக்கங்களுக்குமேல் விவரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்.எஸ்.வேர்ட்-2007, எக்ஸெல் 2007, பப்ளிஷர் -2007, அவுட்லுக் 2007, பவர்பாயின்ட் 2007, டேலி, இன்டர்நெட், இவற்றுக்கான சாஃப்ட்வேர்… என அனைத்தையும் வகைவகையாக, அது அதற்கான புகைப்பட சான்றுகளுடன் எளிய தமிழில் செய்முறை விளக்கம் தரப்பட்டுள்ளது. தவிர, இத்துடன் இலவச இணைப்புகளாக கூகுள் பயனாளர் வழிகாட்டி கையேடு ஒன்றும், கம்ப்யூட்டரில் சுயமாக நாமே பயின்று கொள்ள, ஒரு வழிகாட்டி குறுந்தகடு (CD) ஒன்றும் கூடுதலாகத் தரப்பட்டுள்ளதும் சிறப்பானது. – பரக்கத் நன்றி: துக்ளக், 12-9-12