இடைவேளை

இடைவேளை, ஆர். வெங்கடேஷ், வேத பிரகாசனம், 142 முதல் மாடி, கிரீன் வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28, விலை 100ரூ.

பொருளாதார சீர்கேடுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 3 கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்ட நாவல் இடைவேளை. இதில் பிரதமர், நிதி மந்திரி, இஸ்ரோ விஞ்ஞானி, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் கருத்துக்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பாகும்.  

—-

 

ஸகாத் கோட்பாடும் நடைமுறையும், மெல்லினம், 31பி/3, பள்ளிவாசல் தெரு, கோரிப்பாளையம், மதுரை 2, விலை 150ரூ

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். இதனால் வறுமை ஒழிவது மட்டுமின்றி மனித சமுதாயம் மன நிம்மதியோடு வாழமுடியும். அதே சமயம் இதனை நிறைவேற்றுவதற்கான சட்டதிட்டங்கள், வழிமுறைகளை பெரும்பாலான மக்கள் தெரியாமலிருப்பதால் இதன் முழு நன்மையும் சமுதாயத்தை சென்றடையாமல் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஸகாத் குறித்த கோட்பாடு, முக்கியத்துவம் மற்றம் அது விதியாகும் பொருள். இருக்க வேண்டிய குறைந்தபட்ச அளவு, விதியாகும் அளவு, அதனை வழங்க கடமைப்பட்டோர் மற்றும் பெறத் தகுதியுடையோர், ஸகாத்தை சேகரிக்கும், விநியோகிக்கும் முறை ஆகியவை குறித்து, இந்நூலில் விரிவாகவும், தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி,6/11/13

Leave a Reply

Your email address will not be published.