முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 156, விலை 120ரூ.

விடுதலைபெற்று 68 ஆண்டுகள் ஆனபின்னும் சுயசிந்தனைக்கான கல்வி இன்னும் எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை என் 34 ஆண்டுக்காலக் கற்பித்தல் அனுபவத்தில் கண்டேன் என்கிற சுயவிமர்சனத்தோடு இந்த ஆழமான சிந்தனைகளுக்குரிய நூலை வெளியிட்டிருக்கிறார் நா. முத்துநிலவன். நடுத்தர வர்க்கத்தின் ஆடம்பரத்தில் கல்வுயும் அகப்பட்டுத் தவிக்கிறதே? என்கிற ஆதங்கத்தொடு பழுத்த அனுபவமுள்ள ஒரு ஆசிரியரே கேள்வியெழுப்புவது வேதனைக்குரியதுதான். மறுவாசிப்புக்கு உட்படுத்திச் சொல்லித் தரப்படவேண்டிய பல நூறு பழமரபுக் கதைகளை இன்னமும் அப்படியே சொல்லித் தருவதைக் கண்டிக்கும் முத்து நிலவன், அரிச்சந்திரன் கதையைப் பற்றிக் கேள்வி எழுப்புவதையும் சிந்திக்கத்தான் வேண்டும். அரசனின் கடமை மக்களைக் காப்பாற்றுவதா? வாய்மையைக் காப்பாற்றுவதா?, அழகான தொடர் திருவளர் செல்வி என்பது. வினைத்தொகை என்பது மட்டுமன்று வாழ்நாள் முழுவதும் திருவும் (செல்வமும் பிற பெருமைகளும்) வளரக்கூடிய செல்வி எனப் பொருள்படும் திருவளர் செல்வியில், திருமணத்துக்கு முன்பே வைக்கக்கூடாத ‘ச்’ வச்சதாரு? என்று கேட்கிற நகைச்சுவையின் அழகையும் ரசித்தபடி சிந்திக்கலாம். பயனுள்ள பத்தொன்பது கட்டுரைகளின் அருமையான தொகுப்பு. -சுப்ர பாலன். நன்றி: கல்கி, 4/1/2015.

Leave a Reply

Your email address will not be published.