ஆமை காட்டிய அற்புத உலகம்

ஆமை காட்டிய அற்புத உலகம், யெஸ். பாலபாரதி, புக்ஸ் பார் சில்ரன், பக். 80, விலை 60ரூ.

சிறார் நாவல் உலகில் ஓரு புதிய வரவு, ‘ஆமை காட்டிய அற்புத உலகம்.’ ஜூஜோ என்ற ஆமையுடன் சிறுவர்கள் மேற்கொள்ளும் ஒரு சாகசப் பயணத்தை விவரிப்பதுதான் இந்த நாவல்.

சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் எப்போதும் வசீகரிப்பது கடல். கடலும் அதன் அற்புதங்களும் கேட்கச் சலிக்காதவை. அத்தகைய விரிவானதொரு பின்புலத்தில் கடலுக்குள்ளே சென்று நாமே பார்க்கிற நேரடி அனுபவத்தைத் தருகிறது இந்நாவல்.

கடல்வாழ் உயிரினங்கள், அவற்றின் வாழ்க்கை முறை, கடலை மாசுபடுத்தி அதன் தூய்மையைக் கெடுக்கும் பொருட்கள், சுற்றுச்சூழல் எனப் பல தகவல்களை இந்தக் கதையின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. கதையைச் சொல்லிக்கொண்டு போவதோடு ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிறப்புத் தகவல்களும் பெட்டிச் செய்தியாக இடம்பெற்றிருக்கின்றன.

எந்த இடத்திலும் தொய்வில்லாமல் ஜாலியான நடையில் சிறார் மனம் கவரும்படி எழுதியிருக்கிறார் நூலாசிரியர். கி.சொக்கலிங்கத்தின் பொருத்தமான ஓவியங்கள் நாவலுக்குக் கூடுதல் அழகு சேர்க்கின்றன.

-அகநாழிகை.

நன்றி:தினமலர், 24/7/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *