பஷீர் நாவல்கள்
பஷீர் நாவல்கள்; ஆசிரியர் வைக்கம் முகம்மது பஷீர், தமிழில்: குளச்சல் யூசுப், சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.575/-
தனிமனிதரின் உலகம் மிகப் பெரிய வெளிச்சங்களைத் தன்னகத்தே மிக ஆழத்தில் வைத்திருக்கிறது. ஆழத்தில் படிந்திருக்கும் அதிசயங்களைத் திறந்து காண்பித்தவர் பஷீர். எண்ணங்களிலும் வாழ்விலும் என்றுமே குறைந்திடாத பேரன்புகளைக் குழந்தைமையின் மாசில்லா வார்த்தைகளில் இலக்கியமாக்கியவர். வெவ்வேறு தருணங்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பஷீரின் எட்டு நாவல்களையும் தொகுத்து ‘காலச்சுவடு’ வெளியிட்டிருப்பது தமிழ் வாசகர்களுக்கான ஒரு அழகிய பரிசு.
வைக்கம் முகம்மது பஷீரின் நுட்பமான எழுத்துகளையும், இழையோடும் நகைச்சுவையையும், வட்டாரச் சொற்களையும், பண்பாட்டுப் பின்புலங்களையும் பார்த்துப் பார்த்துச் செறிவாக மொழிபெயர்த்திருக்கிறார்கள் குளச்சல் யூசுப், சுகுமாரன். இந்தியப் புனைவெழுத்துகளில் தனித்தன்மை கொண்ட ஆளுமை பஷீர்.
‘ஒண்ணும் ஒண்ணும் எத்தனைடா?’ என்பதற்கு, ‘கொஞ்சம் பெரிய ஒண்ணு’ என்று சொல்லும் பஷீரின் எளிமையான உலகில் நுழைந்துகொள்வதும், அந்த நெகிழ்வான மனதைப் புரிந்துகொள்வதும் மதுரசுந்தரமான அனுபவம்.
நன்றி.தமிழ் இந்து. 04.07.2020.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000025447_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818