செவ்வி

செவ்வி, பேரா. தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ.

ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பரப்பில் அறிவார்த்தமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், சரியாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் தொ. பரமசிவன். மரபின் வேர் பிடித்து நம்மை அழைத்துச் செல்பவர். அவரின் 14 நேர்காணல்கள் இடம்பெற்ற தொகுதி இது.

144 பக்கங்களுக்குற் செறிந்த உலகத்திற்குச் செல்வது சாத்தியமாகிறத, நம்முன்னோர்கள், சாதிகள், திராவிடக் கருத்தியல், தமிழர் பண்பாடு, பகுத்தறிவு, சீர்திருத்தம், தமிழ் தேசியம் என பரந்துபட்ட பரப்பிற்குள் மூழ்கி எழுகிற எத்தனிப்பு.

மேலோட்டமாக எதையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு சிந்தனைத் திறனை இவ்வளவு நுணுக்கமாகத் தர முடிகிற ஐயா தொ.பரமசிவன், தமிழ் உலகிற்குக் கிடைத்திருக்கிற பெருங்கருணை!

நன்றி: குங்குமம், 26/8/2016.

Leave a Reply

Your email address will not be published.