இந்தி ஏகாதிபத்தியம்
இந்தி ஏகாதிபத்தியம், ஆலடி அருணா, விகடன் பிரசுரம், விலை 240ரூ.
நாடு விடுதலை அடைந்த பின் தமிழகம் கண்ட புரட்சியில் மிக முக்கியமானது மொழிப்போர் என்பதை தமிழ்ப் பேசும் நல்லுகம் நன்கறியும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வலுக்கட்டாயமாக நடந்த இந்தி திணிப்பையும், அதற்கு எதிராக தமிழகம் மேற்கொண்ட போராட்டங்களையும் கச்சிதமாக விவரிக்கிறது இந்த நூல்.
‘ஒரு இனத்தை அடிமைப்படுத்த வேண்டுமென்றால் அவர்களின் மொழியை அழித்து விட வேண்டும்’ என்ற சூழ்ச்சியின் அடிப்படையிலேயே, பாரதத்தின் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் மற்ற பகுதிகளில் இந்தியை திணிக்க முயன்றதாக கூறும் ஆசிரியர், அதற்காக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நூலில் விளம்பியுள்ளார்.
இந்த போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றவரும், மொழிப்போரை முன்னெடுத்த தி.மு.க.வின் முன்னணி தலைவராகவும் இருந்த ஆலடி அருணா எழுதியுள்ள இந்த நூல், இந்தி எதிர்ப்பு போர் குறித்து அறிய விரும்பும் இளம் தலைமுறைக்கு ஒரு தகவல் களஞ்சியம் என்றால் மிகையல்ல.
நன்றி: தினத்தந்தி,16/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818