கம்பனின் ஆற்றலும் இராமாயணத்தின் சிறப்பும்

கம்பனின் ஆற்றலும் இராமாயணத்தின் சிறப்பும், அருட்கவிஞர் அ. காசி, மணிமேகலை பிரசுரம், பக். 88, விலை 60ரூ.

சீதாபிராட்டியாரின் ஜானகி, மைதிலி, வைதேகி என்ற பெயர் விளக்கம் ஒவ்வொன்றும் அறிந்தது என்றாலும் ‘சீ’, ‘தை’க்குக் கொடுத்த பொருள் போற்றச் செய்கிறது. ராமனின் கை நிக்கிரகம், சீதையின் கை அனுக்கிரகம். சீதையின் கரம் பற்றினால்தான் அனுக்கிரக சக்தி கிடைக்கும் என்ற ஆசிரியரின் கற்பனை, அவரின் பக்தி உணர்வைக் காட்டுகிறது.

துந்துபி என்ற கதாபாத்திரத்தின் எலும்பை லட்சுமணன் தன் காலால் எட்டித் தள்ளும் காட்சி விளக்கத்தில் இதுவரை அறியாத கம்பனின் கவித்திறனை எடுத்துரைக்கிறார் அ. காசி.

இதுவரை 80 புத்தகங்களை படைத்துள்ள இவர் அருட்கவி என்பதில் ஐயமில்லை.

நன்றி: விஜயபாரதம், 15/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *