கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை

கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை, மலையாள மொழியில் ரங்க ஹரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், விஜயபாரதம், விலை 120ரூ. போர்ச்சுக்கீசிய ஆட்சியில் கோவாவில் நடந்த மதமாற்றத்தால் ஏற்படும் கொடுஞ்செயல்களை நூலாசிரியர் அனைவருக்கும் புரியும் வகையில் நேரடி காட்சியாக காண்பித்து உள்ளார். கொங்கன் பகுதியில் இருந்து ஓடிச்செல்ல வேண்டிய ஒரு பகுதி மக்களின் சோகக் கதையை நூலாக, நூலாசிரியர் வடித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

இராஜஜோதிடம்

இராஜஜோதிடம், மணிமேகலை பிரசுரம், பக். 88, விலை 60ரூ. உலக மக்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வழிகாட்டுபவைகளே சாஸ்திரங்கள். அதன் அடிப்படையில் மக்கள் பயன்பெறும் வகையில் பஞ்ச பூத தத்துவ நட்சத்திர பாதசாரங்களின் அடிப்படையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது இந்நூல். பகவான் கிருஷ்ணன், சத்ரபதி சிவாஜி முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் வரை கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகங்கள் ஜோதி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் உதவும். நன்றி: விஜயபாரதம், 15/1/2016.

Read more

கம்பனின் ஆற்றலும் இராமாயணத்தின் சிறப்பும்

கம்பனின் ஆற்றலும் இராமாயணத்தின் சிறப்பும், அருட்கவிஞர் அ. காசி, மணிமேகலை பிரசுரம், பக். 88, விலை 60ரூ. சீதாபிராட்டியாரின் ஜானகி, மைதிலி, வைதேகி என்ற பெயர் விளக்கம் ஒவ்வொன்றும் அறிந்தது என்றாலும் ‘சீ’, ‘தை’க்குக் கொடுத்த பொருள் போற்றச் செய்கிறது. ராமனின் கை நிக்கிரகம், சீதையின் கை அனுக்கிரகம். சீதையின் கரம் பற்றினால்தான் அனுக்கிரக சக்தி கிடைக்கும் என்ற ஆசிரியரின் கற்பனை, அவரின் பக்தி உணர்வைக் காட்டுகிறது. துந்துபி என்ற கதாபாத்திரத்தின் எலும்பை லட்சுமணன் தன் காலால் எட்டித் தள்ளும் காட்சி விளக்கத்தில் இதுவரை […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே!

காஷ்மீர் இந்தியாவுக்கே!, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 303, விலை 250ரூ. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ்.பி. குட்டி எழுதிய புத்தகம். 1965ல் இந்தோ-பாக் போரில் பங்கேற்றவர். காஷ்மீரில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர். புத்தகத்தில் காஷ்மீர் முதல் போர், பாகிஸ்தான் ஊடுருவல், ஆக்கிரமிப்பு சதித்திட்டங்கள், ஐ.நா. விவாதங்கள், ஆர்டிகிள் 370 ஆகியன பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் தொடர்பான இந்தியத் தரப்பு நியாயங்களையும், பாகிஸ்தானின் அத்துமீறல்களையும், இந்திய அரசியல்வாதிகளின் பிழைகளையும், பிரிட்டிஷாரின் தந்திரங்களையும் முழுமையாக விவரிக்கும் தமிழ்நூல் இது. ஒவ்வொரு […]

Read more