காஷ்மீர் இந்தியாவுக்கே!
காஷ்மீர் இந்தியாவுக்கே!, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 303, விலை 250ரூ.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ்.பி. குட்டி எழுதிய புத்தகம். 1965ல் இந்தோ-பாக் போரில் பங்கேற்றவர். காஷ்மீரில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர்.
புத்தகத்தில் காஷ்மீர் முதல் போர், பாகிஸ்தான் ஊடுருவல், ஆக்கிரமிப்பு சதித்திட்டங்கள், ஐ.நா. விவாதங்கள், ஆர்டிகிள் 370 ஆகியன பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் தொடர்பான இந்தியத் தரப்பு நியாயங்களையும், பாகிஸ்தானின் அத்துமீறல்களையும், இந்திய அரசியல்வாதிகளின் பிழைகளையும், பிரிட்டிஷாரின் தந்திரங்களையும் முழுமையாக விவரிக்கும் தமிழ்நூல் இது.
ஒவ்வொரு தேசபக்தனும் அவசியம் படிக்க வேண்டிய வரலாற்றுக் காவியம்.
நன்றி: விஜயபாரதம், 15/1/2016.