கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள்
கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள், கலைஞன் பதிப்பகம், விலை 150ரூ.
தமிழக அரசியலில் கடந்த 44 ஆண்டுகளாக வெறும் அரசியல் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு சமுதாய பிரச்சினைகளையும் கையில் எடுத்து போராடியவர், ஐகோர்ட்டு வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
மனித உரிமை பாதுகாவலர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தொடக்க முதலே போராடியவர். அவர் “கதை சொல்லி கே.எஸ்.ஆர்.குறிப்புகள்” என்ற நூலை எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல சிறப்புக்குரிய மாமனிதர்கள், பல்வேறு வரலாற்று சிறப்புகள், யதார்த்த உண்மைகள், எல்லாவற்றையும் 157 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் சிறப்பாக எழுதியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவரது தணியாத வேட்கை இந்த நூலில் தெளிவாகத் தெரிகிறது. வெளிமாநிலங்களில் வேண்டாம் என்று விரட்டிவிடப்பட்ட திட்டங்கள், தமிழ்நாட்டில் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்ட கொடுமையான சம்பவங்களையும், அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் இந்த நூலில் விளக்கியுள்ளார். சிந்தனையைத் தூண்டும் சிறந்த நூல்.
நன்றி: தினத்தந்தி, 15/3/2017.