திரவுபதியின் கதை
திரவுபதியின் கதை, ஒரியா மூலம் பிரதிபாராய், ஆங்கிலத்தில் பிரதீப் பட்டாச்சார்யா, தமிழில் இரா. பாலச்சந்திரன், சாகித்திய அகாதெமி, விலை 275ரூ.
மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று திர்வுபதி. விதி வசத்தால் ஐந்து பேரை கணவர்களாகப் பெற்ற திரவுபதி, பத்தினி என்று சிலரால் போற்றப்பட்டாலும் வேறு சிலரால் வேசி என்று இகழப்பட்டாள். இதன் மூலம் அவள் அடைந்த இன்னல்களை விவரமாகவும் உருக்கமாகவும் தந்து இருக்கிறார் ஆசிரியர்.
மகாபாரதக் கதையை அதிக அளவில் பயன்படுத்தி, அத்துடன் சில கற்பனை கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் கோர்த்து அருமையான நாவல் போல எழுதப்பட்டுள்ளதால், படிக்க சுவாரசியமாக இருக்கிறது. திரவுபதியின் பாத்திரப் படைப்பு நெகிழவைக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 15/3/2017.