மலர்களுக்காக மலர்ந்தவை

மலர்களுக்காக மலர்ந்தவை, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 184, விலை 135ரூ.

“ஓம்சக்தி’ தீபாவளி மலருக்காக நூலாசிரியர் எழுதிய “மும்மூர்த்திகளும் தமிழர்களும்’, “கப்பலோட்டிய தமிழனின் கடைசி மணித்துளிகள்\’, “மாவீரனின் கடைசி மணித்துளிகள்‘’ ஆகிய கட்டுரைகள் போன்று பல்வேறு சமயங்களில் பல்வேறு மலர்களுக்காக எழுதப்பெற்ற கட்டுரைகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.

“வடலூர் வள்ளலாரும் பசும்பொன் தேவரும்\’ கட்டுரையில் இருபெரும் மகான்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒப்பீடும், “மும்மூர்த்திகளும் தமிழர்களும்“ ட்டுரையில் காந்திக்கு “மகாத்மா’ என்ற பட்டம் எப்படி, யாரால் அளிக்கப்பட்டது “  என்பதற்கான விவரமும், மரணத்தைக் கண்டு அஞ்சாமல் இறுதிவரை வாசிப்பதைத் தன்னுடைய சுவாசிப்பாகக் கொண்டு வரலாறு படைத்த மாவீரன் பகத்சிங்கின் வரலாறும், இறுதி மூச்சுவரை தேசத்தைப் பற்றியும், தேச விடுதலை பற்றியும் நினைத்துக் கொண்டிருந்த சிதம்பரனார் வறுமை, நோய்க்கு உள்ளானாலும், பாரதியின் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்‘’ பாடலைக் கேட்டுக்கொண்டே தன்னுடைய இறுதி மூச்சை விட்ட வரலாற்றுப் பதிவும், நூலுக்கு மெருகேற்றுகிறது.

நன்றி:தினமணி, 21-11-2016.

Leave a Reply

Your email address will not be published.