மருந்தில்லா சிகிச்சை முறைகள்
மருந்தில்லா சிகிச்சை முறைகள், ஜி.லாவண்யா, நர்மதா பதிப்பகம், பக்.160, விலை ரூ.100.
மருந்தில்லாத மருத்துவமுறைகள் என்று சொன்னவுடன் தொடுசிகிச்சை, வர்ம சிகிச்சை போன்றவைதாம் நினைவுக்கு வரும். ஆனால் இந்நூலில் உணவு சிகிச்சை, சூரியக்குளியல், நீர் சிகிச்சை, மண் சிகிச்சை,பிரபஞ்ச சக்தி சிகிச்சை, யோகாசன சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நறுமண திரவ சிகிச்சை, இசை சிகிச்சை ஆகிய மருந்தில்லாத சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
நாடி பரிசோதனை மூலமாக ஒருவருடைய உடல்நிலையைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார் நூலாசிரியர். அறுசுவை உணவுகளைப் பற்றியும், எந்த உணவுடன் எந்த உணவைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. ரொட்டியுடன், கோதுமை உணவுகளுடன், உருளைக்கிழங்குடன் தக்காளி சேர்த்துக் கொள்ளக் கூடாது; ஒரு கரண்டி அளவுக்கு அதிகமாகத் தயிர் சாப்பிடக் கூடாது என்பன போன்ற பலர் அறியாத அரிய தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு நோய்க்கும் உரிய சூரியக்குளியல் சிகிச்சை, நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, பிரபஞ்ச சக்தி சிகிச்சை, யோகாசன சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நறுமண திரவ சிகிச்சை, இசை சிகிச்சை ஆகியவற்றை விரிவாக படங்களுடன் விளக்கியிருப்பது சிறப்பு.
பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மருத்துவமுறைகளுக்கு மாற்றான மருத்துவம் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும் நூல்.
நன்றி: தினமணி, 16/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818