ரகுநாதம்

ரகுநாதம், தொகுப்பாசிரியர் காவ்யா சண்முக சுந்தரம், காவ்யா, விலை 1100ரூ.

எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், விமர்சகர், மேடைப் பேச்சாளர் என்னும் பன்முகம் கொண்டவர் தொ.மு.சி.ரகுநாதன். அவரது கட்டுரை, கவிதை, நாடகங்களை ‘ரகுநாதம்’ என்ற பெயரில் காவ்யா சண்முக சுந்தரம் நூலாகத் தொகுத்துள்ளார். இதில் 100 கட்டுரைகளும், 2 நாடகங்களும், 56 கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

இவரது எழுத்துகளில் நாட்டுப்பற்று, விதவை மறுமணம், சாதி மறுப்பு, விடுதலை உணர்வு ஆகியவைகளை வெளிப்படுத்தியுள்ளார். ‘ரகுநாதனின் தமிழ் நடை அழகியது. இனியது. ஜீவன் நிறைந்தது.

புதுமைப்பித்தனுக்குப் பிறகு இவர்தான் திருநெல்வேலி வட்டார பேச்சு மொழியைத் திறமையாகத் தன் கதைகளில் பயன்படுத்தியுள்ளார்’ என்பார் வல்லிக்கண்ணன். அது உண்மை என்பதை இத்தொகுப்பு உணர்த்துகிறது.

நன்றி: தினத்தந்தி, 21/12/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *