சொல் அல்ல செயல்

சொல் அல்ல செயல்,  அதிஷா,  விகடன் பிரசுரம், பக்.264, விலை ரூ. 215. நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை நாமே சமரசப்படுத்திக் கொண்டும் நியாயப்படுத்திக் கொண்டும் இது தவறில்லை என்று செய்யும் பல்வேறு செயல்கள் தவறுதான் என்று ஆணித்தரமாக உடைத்துக் காட்டுகிறார் நூலாசிரியர் அதிஷா. உதாரணமாக, நாகரிக உலகில் கடன் அட்டைகள், ஆடம்பர செல்லிடப்பேசிகள் இவற்றை வாங்குவதற்காக கடன் வாங்கும் அவலத்தை நண்பர் ரவியின் தற்கொலை மூலம் உணர்த்துகிறார். வாழ்க்கையில் அனைவரும் தமக்கு விருப்பமானதை விட்டு விட்டு பிறரின் விருப்பத்துக்காக ஓடுவதையும், அதே நேரத்தில் […]

Read more

சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், தி. பரமேசுவரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 220, விலை 180ரூ. பெண்கள் குறித்தும், தமிழர்களது வாழ்வுரிமை, தேசியம், வரலாறு, மாட்சிமை, பெருமை குறித்தும், முந்தைய, இன்றைய வாழ்வியல் நிலை குறித்தான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற பிரிவுகளின் கீழ், 32 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றள்ளன. பெண் படைப்பாளிகளின் பங்கு குறித்து முழுவதுமாய் ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியரும், ம.பொ.சி.யின் பேத்தியுமான தி. பரமேசுவரி. கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாளரின் சுய கருத்தின் அடிப்படையிலும், […]

Read more