சொல்லித்தந்த வானம்

சொல்லித்தந்த வானம், அருள்செல்வன், புதிய தமிழ் புத்தகம், பக். 256, விலை 230ரூ. தமிழ் சினிமாவில் புதிய நடைமாற்றத்தை வழங்கியவர் இயக்குனர் மகேந்திரன். வணிக சினிமா வந்தபோதும், திரைமொழி இலக்கியமாக மட்டுமே இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தவர். திரைப்படங்கள் மீது வைத்திருந்த காதலை, திரைத்துறையைச் சேர்ந்த, 56 பேர் எழுதி உள்ளனர்.நடிகர் ராஜேஷ், ‘சிறு வயதில் இருந்தே நிறைய படிப்பார். கமர்சியல் சினிமாக்களை கேலி செய்வார். ஒரு ஆள், 10 பேரை துாக்கி அடிப்பது போன்ற காட்சியை பார்த்து சிரிப்பார்… ‘ஒரு நடிகர், […]

Read more

சொல்லித்தந்த வானம்

சொல்லித்தந்த வானம், அருள்செல்வன், புதிய தமிழ் புத்தகம், பக். 256, விலை 230ரூ. திரை உலகில் தடம் மாற்றி யோசித்து, தடுமாறமல் நடைபோட்டு, தனக்கென்று தனி இடம் பிடித்தவர் இயக்குநர் மகேந்திரன். அவரது சிந்தனையும் செயலும் ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா உலகினரையே வியக்கச் செய்தவை. மாற்றி யோசித்து மகத்தான கலைச்சேவை செய்த அவரைப்பற்றி மறக்க முடியாத தங்கள் நினைவுகளை திரை உலகைச் சார்ந்த சாராத பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த நூலில். மகேந்திரனின் எண்ணங்களைப் போலவே இதுவும் வித்தியாசமாக மணக்கிறது.. நன்றி: குமுதம், 23/10/19 […]

Read more

சகலகலா வல்லபன்

சகலகலா வல்லபன், அருள்செல்வன், அபு மீடியாஸ், விலை 180ரூ. மீன்கொடி தேர்வலம் கவிஞர், பாடலாசிரியர், திரை இயக்குநர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் வாய்ந்த எம்.ஜி.வல்லபனைப் பற்றிய கட்டுரை தொகுப்பு இந்நூல். அவர் மறைந்து 13 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது சிஷ்யர் அருள்செல்வன் அவரை நினைவுகூறும் விதமாக கொண்டுவந்துள்ள இத்தொகுப்பில் எம்.ஜி.வல்லபனைப் பற்றிய முழு பரிமாணமும் வாசகர்களுக்குத் தெரியவருகிறது. தமிழ் பத்திரிகை உலகில் இன்றைக்கு மருத்துவம்,  சினிமா, ஜோதிடம், விளையாட்டு என்று தனித்தனியே நிறைய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ‘பிலிமாலயா’ என்கிற ஒரே […]

Read more