ஆறங்கம்

ஆறங்கம் (அரசியல் நாவல்), ஆர். நடராஜன், ஆதாரம்வெளியீடு, பக்.208, விலை குறிப்பிடப்படவில்லை; அரசியல் உலகில் ஜாம்பவான்களாக வலம் வந்த ஒவ்வொருவரும், அரசியல் – அரசியல்வாதிகள் குறித்த அவர்களின் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல சாமானியர்களும் நகைச்சுவையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவையெல்லாம் இந்நூலுக்கு வலு சேர்த்திருக்கின்றன. நாட்டை ஆளும் தலைவனுக்கு (அரசர்) தேவையான ஆறு உறுப்புகள் என்று சொல்லக்கூடிய படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவற்றையும், ஆறு வேதாங்கங்களையும் சுற்றி நூல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இந்நூலுக்கு ஆறங்கம் என்று பெயர் சூட்டியிருக்கிறார் […]

Read more

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா, ஆர். நடராஜன், மணிவாசகர் பதிப்பகம், பக்.176,  விலை ரூ.150. இந்தியாவில் இரும்பு, எஃகு ஆலை, மின்சார ஆலை உள்ளிட்ட இன்றைய முக்கியத் தொழில் துறைகள் அனைத்துக்கும் அன்றே அடித்தளமிட்டவர் ஜாம்ஷெட்ஜி டாட்டா. ஜாம்ஷெட்ஜியின் டாட்டா குழுமம் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்த போதிலும், அவரது பெயரன் ஜே.ஆர்.டி. டாட்டாவுக்கு விமானத்துறை மீது தணியாத ஆர்வம் இருந்தது. விமானம் ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்று இந்தியாவின் முதல் விமானியானது மட்டுமல்லாது, அன்றைய ஆங்கில அரசின் அனுமதியுடன் முதல்முதலில் கராச்சி – […]

Read more

நாடு படும் பாடு

நாடு படும் பாடு, ஆர். நடராஜன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. சமூக மாற்றத்திற்கு மக்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு சமூகச் சிந்தனையுடன் கூடிய எழுத்தும் முக்கியம் என்பதை இந்த நூலின் கட்டுரைகள் உணர்த்துவதாக அமைந்துள்ளன. கட்டுரைஆசிரியர் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள சமூக, அரசியல் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும், சமூக அக்கறையுடன் ஆழமான சிந்தனையுடன் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. 51 கட்டுரைகள் அடங்கிய இந்த நூலில் பல கட்டுரைகள் கடந்த கால […]

Read more

நாடு படும் பாடு

நாடு படும் பாடு, ஆர். நடராஜன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. கல்லூரி முதல்வராகவும், பத்திரிகையாளராகவும், அமெரிக்கத் தூதரக அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய இந்நூலாசிரியர், தமிழிலும், ஆங்கிலத்திலும் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பத்திரிகைகளில் எதையும் தெளிவாகவும், துணிவாகவும் எழுதும் அரசியல் விமர்சகர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. இந்நூலில் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் போன்றவை குறித்து துக்ளக் உட்பட பல பத்திரிகைகளுக்கு எழுதியவற்றில், சிறப்பான 51 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸின் கடந்த கால ஆட்சி குறித்த இவரது கடுமையான […]

Read more

யாருக்காக இந்தியா

யாருக்காக இந்தியா?, ஆர். நடராஜன், ஆதாரம், பக். 367, விலை 225ரூ. டாக்டர் ஆர். நடராஜன், தினமலர், துக்ளக் ஆகிய பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். இதில் பிரதமருடன் பேட்டி என்ற கட்டுரை துவங்கி, மொத்தம் 80 கட்டுரைகள் உள்ளன. இவை 2012, 2013ம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை. நூலின் துவக்கத்தில் சர்வ வீரிய சர்வாக்ரக, சர்வ வியாபியான இத்தாலிய ஜனன, இந்திய பிரஜா ஸ்நான சோனியா காந்திக்கு இந்த நூல் சமர்ப்பணம் என ஆசிரியர் தனி கட்டம் போட்டு குறிப்பிட்டுள்ளார். […]

Read more