அயோத்தி தாசர் துவக்கி வைத்த அறப்போராட்டம்

அயோத்தி தாசர் துவக்கி வைத்த அறப்போராட்டம், பிரேம், எதிர் வெளியீடு, பக். 184, விலை 200ரூ. இந்தப் படைப்பு பண்டிதர் அயோத்தி தாசரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அயோத்திதாசர் சமூக விடுதலைக்கான கோட்பாட்டு அடையாளம். பூமியை உழுபவன் சின்ன சாதி, உழைப்புள்ளவர்கள் சிறிய ஜாதி, சோம்பேறிகள் பெரிய ஜாதிகள் என்று சொல்லித்திரிவது இன்றைய வழக்கமாகிவிட்டது என்று சாடியவர் அயோத்திதாசர். பொய் ஜாதி கட்டுகளை ஏன் அகற்றினீரில்லை? என்று தட்டிக் கேட்ட புரட்சிக்காரனை சிறப்பாக அறிமுகப்படுத்தும் நூல். நன்றி: தினமலர், 9/2/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

தீர்ப்பு

தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல், பிரணாய் ராய், தொராய், ஆர்.சொபாரிவாலா, தமிழில்: ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, விலை: ரூ.399 ஊடகவியலாளர், பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலாவுடன் இணைந்து எழுதிய புத்தகம் ‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக் ஷன்ஸ்’. 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வு நூல் இது. பல்வேறு தரப்பினரது கவனம் ஈர்த்த இப்புத்தகம் இப்போது தமிழில் வெளிவந்திருக்கிறது. நன்றி: தமிழ் இந்து,15/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல்

இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல், பிரணாய் ராய், தொராய், ஆர்.சொபாரிவாலா, தமிழில்: ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, விலை: ரூ.399 ஊடகவியலாளர், பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலாவுடன் இணைந்து எழுதிய புத்தகம் ‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக் ஷன்ஸ்’. 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வு நூல் இது. பல்வேறு தரப்பினரது கவனம் ஈர்த்த இப்புத்தகம் இப்போது தமிழில் வெளிவந்திருக்கிறது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. […]

Read more

விலகி நடக்கும் சொற்கள்

விலகி நடக்கும் சொற்கள், ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, பக்.160, விலை175ரூ. சிந்தையள்ளும் கட்டுரைகள்! ‘அம்மாக்களும், அடையாளச் சிக்கலும்!’ என்ற முதல் கட்டுரையில் ஆசிரியர் சொல்வார்; ‘குழந்தைகள் அழகானவை. பூக்களை போன்றவை. எல்லா உயரிய விஷயங்களைப் போல அவையும் தீவிர கவனத்தைக் கோருபவை. ‘அந்தப் பராமரிப்பின் சுமையை ஏற்க ஆழ்ந்த காதலும், பொறுமையும், புரிந்துணர்வும் வேண்டும். அதற்கு தயாரில்லை எனில் நிகழும் வன்முறைகளைத் தடுக்கவே முடியாது!’ தமிழ் சினிமா: கோடுகளை அழிக்கும் ரப்பர்! என்ற கட்டுரையில் பேசுவார்; ‘‘பொறுக்கித்தனத்தில் ஒரு தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகனும், […]

Read more

காலம்

காலம், ஸ்டீவன் ஹாக்கிங், தமிழில்: நலங்கிள்ளி, எதிர் வெளியீடு தலைசிறந்த அறிவியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங். அறிவியல் கோட்பாடுகள் மட்டுமின்றி, அந்தக் கோட்பாடுகளை சாதாரண மக்களையும் ஈர்க்கும் வகையில் அவர் எழுதிய புகழ்பெற்ற புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம் இந்த நூல். நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்

தேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும், தோப்பில் முகம்மது மீரான், இர.பிரபா, எதிர் வெளியீடு, பக். 118, விலை 130ரூ. பிரபஞ்சன் எனும் ஆளுமைக்கு, புதுச்சேரி அரசு மரியாதை செலுத்தியது. தமிழக அரசோ, மத்திய அரசோ ஒரு மலர் வளையத்தைக் கூட எந்த எழுத்தாளருக்கும் வைப்பதில்லை’ (பக்., 11) என்று நியாயமாக ஆதங்கப்படும் நுாலாசிரியர், அன்பின் பெருங்கடலாய் தோப்பில் முகமது மீரானை ஆராதித்து, அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் உரையாடிய நேர்காணல்களையும், மீரானின் படைப்புகளான தேங்காய்ப் பட்டணம், மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களையும் இதில் […]

Read more

எங்கே செல்கிறது இந்தியா

எங்கே செல்கிறது இந்தியா, டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ், எதிர் வெளியீடு, விலை: ரூ.350 இந்திய புள்ளியியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும், ஆர்ஐசிஇ அமைப்பின் நிர்வாக இயக்குநர்களுமான டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ் இருவரும் இணைந்து எழுதிய ‘எங்கே செல்கிறது இந்தியா: கைவிடப்பட்ட கழிப்பிடங்கள், தடைபட்ட வளர்ச்சிகள், சாதியத்தின் விலைகள்’ புத்தகத்தில், இந்தியாவின் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றான திறந்தவெளி மலம் கழித்தல் குறித்து மிக விரிவானதொரு ஆய்வுப் பார்வையை முன்வைத்திருக்கிறார்கள். இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தலும் அதைச் சார்ந்த பிற சிக்கல்களையும் காரணங்கள், விளைவுகள், […]

Read more

ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, விலை 190ரூ. பாவனையற்ற கதைகள் ஜி.கார்ல் மார்க்ஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ராக்கெட் தாதா’விலுள்ள கதைகளை, சிறுநகரம் சார்ந்த மத்திய வர்க்கத்தின் உணர்வுத் தருணங்களை மையப்படுத்தும் கதைகளாக அடையாளப்படுத்தலாம். கார்ல் மார்க்ஸ் தான் கையாளும் வாழ்க்கையைப் பாவனையின்றி அணுகுகிறார். இந்தக் கதைகள் சமூக நிகழ்வுகளுக்குப் புதிய அர்த்தங்களை கொடுக்கக்கூடியவை அல்ல; மாறாக, அந்நிகழ்வுகளின் உணர்வுப் பரிமாணங்களை மீள்உருவாக்கம் செய்வதாக அமைகிறது. தலைப்புக் கதையான ‘ராக்கெட் தாதா’ முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றி எழுதப்பட்ட கதைகளில் சிறந்த […]

Read more

நான் செய்வதைச் செய்கிறேன்

நான் செய்வதைச் செய்கிறேன், ரகுராம் ஜி.ராஜன், தமிழில்: ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, பக்.408, விலை ரூ.399. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2013 முதல் 2016 வரை பணியாற்றிய நூலாசிரியர், தான் பணியாற்றிய காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், சந்தித்த பிரச்னைகள் பற்றி இந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நீண்டநாள் பயன்கள் இருக்கக் கூடும் என்றாலும், குறுகிய கால பொருளாதார இழப்புகள் அவற்றை மிஞ்சிவிடும் என்ற கருத்து நூலாசிரியருக்கு இருந்திருக்கிறது. பணவீக்கத்தை மேலாண்மை செய்வது, வாராக் கடன்கள் பிரச்னையைத் தீர்ப்பது, […]

Read more

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள், சண்முகானந்தம் செயக்குமார், எதிர் வெளியீடு, விலை 500ரூ. பறவைகளுக்கும் தமிழ் மண்ணுக்குமான உறவு நெடியது, இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதும்கூட. இந்த உறவை சங்கப் பாடல்கள் தொடங்கி தற்போதுவரை காணலாம். தமிழகத்தில் பறவைகளைப் பாதுகாக்க பல்வேறு சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.. அவற்றைப் பற்றியும் அங்கு வரும் பறவைகள், அவை சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாகவும் படங்களுடனும் உருவாகியிருக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more
1 2 3 8