நோய்களிலிருந்து விடுதலை

நோய்களிலிருந்து விடுதலை, அ.உமர் ஃபாரூக், எதிர் வெளியீடு, பொள்ளச்சி, விலை 60ரூ. ஒரு சிறிய நூல்கூட ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல். 86 பக்கங்களில் நமது உடல் குறித்த அடிப்படை புரிதலையும் உடலின் இயக்கம் பற்றிய ஞானத்தையும் வழங்குகிறார் ஹீலர் அ. உமர் ஃபாரூக். அக்கு பஞ்சர் சிகிச்சை முறை முன்னோடிகளில் ஒருவரும் தெளிந்த நீரோடை போல அது குறித்து எழுதி வருபவருமான இவர் தனது ஞானத்தின் ஒரு பகுதியை இந்த நூல் மூலம் நமக்குத் தருகிறார். […]

Read more

ஒற்றை வைக்கோல் புரட்சி

ஒற்றை வைக்கோல் புரட்சி, மசனாபு ஃபுகோகா, பூவுலகின் நண்பர்கள். இயற்கை வேளாண்மை குறித்த உலகப் புகழ்பெற்ற அடிப்படை நூல் இது. இயற்கை வேளாண் இயக்கம் தமிழகத்தில் பெரிய உந்துதலைப் பெறுவதற்கு முன்பே வெளியாகிவிட்டது. இன்றைக்கும் இயற்கை வேளாண்மையின் பாடப் புத்தகமாகக் கருதப்படுகிறது. நன்றி: தி இந்து, 22/4/2014.‘   —- மௌன வசந்தம், ரேச்சல் கார்சன், எதிர் வெளியீடு. பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் எப்படி நிலம், நீர், காற்று என ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, நம் உடல்நலனுக்குக் கேடு தரும் பின்விளைவுகளை உருவாக்குகின்றன என்பதை […]

Read more

நீராதிபத்தியம்

நீராதிபத்தியம், சா. சுரேஷ், எதிர் வெளியீடு. கனடாவைச் சேர்ந்த மாட் விக்டோரியா பார்லோவின் Blue Covenant நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சா. சுரேஷ். உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தண்ணீர் அரசியலின் பன்முகப் பரிமாணங்களை பொளேரென உணர்த்தும் நூல். ரோஜாப் பூ வணிகத்துக்காக ஓர் ஏரியின் நீராதாரத்தை யானைகளுக்கு மறுப்பது முதல், சாமானியனுக்கு குடிநீர் வழங்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையைச் செயலாக்குவது வரை புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், நீர் அருந்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, நீங்கள் குடிநீர் குழாயை […]

Read more

நாயகன் பாரதி

நாயகன் பாரதி, மலர் மன்னன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 320, விலை 240ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-014-5.html மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்கள் கதைகளாக இடம் பெறுவதால் நூலின் பெயர் நாயகன் பாரதி. ஆனாலும் இதில் உள்ள 26 கதைகளில் 11 கதைகள் மட்டுமே பாரதியார் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய நுல்களை ஆதாரம் காட்டி, அந்தச் சூழலில் பாரதி எப்படி பேசியிருப்பார் என்கின்ற கற்பனையில் […]

Read more

நுகர்வெனும் பெரும்பசி

நுகர்வெனும் பெரும்பசி, ராமச்சந்திர குஹா, தமிழில் போப்பு, எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, விலை 190ரூ. அறிவியலை நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்களுக்குத் தலைமை தாங்கும்போது நான் உண்மையிலேயே அறிவியலுக்கு எதிரானவன் என்பதை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது என்று சொன்னவர் மகாத்மாக காந்தி. வளர்ச்சி என்ற பெயரால் அறிவியலைப் பொருளாதாரப் பூதமாக்கி, சுற்றுச்சூழலைச் சுத்தமாக துடைத்தெறிந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், ராமச்சந்திர குஹாவின் இந்தப் புத்தகம் வந்துள்ளது. சுற்றுச்சூழலியலின் கடந்த கால வரலாறு எப்படி இருந்தது, […]

Read more

80 ஆண்டு கால தமிழ் சினிமா

80 ஆண்டு கால தமிழ் சினிமா (1931-2011) முதல் பாகம், சித்ரா லட்சுமணன், காயத்ரி பிரிண்ட்ஸ், 2வது தளம், பாரதிதாசன் காலனி, சென்னை 78, பக்கங்கள் 558, விலை 500ரூ. தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) பற்றிய செய்தியில் தொடங்கி எம்.ஜி.ஆர். மரணம் (1987) வரை தமிழ் திரையுலகில் நிகழ்ந்த பல முக்கியமான சுவையான பலரும் இதுவரை அறிந்திடாத செய்திகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ஆதித்தன் கனவு படத்தில் நாயகனாக நடித்த டி.ஆர். மகாலிங்கத்தின் மீது கல்லெறிவதாக ஒரு காட்சி எடுக்கப்பட்டது. […]

Read more

அமர்த்தியா சென் – சமூக நீதிப் போராளி

அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி – ரிச்சா சக்சேனா; தமிழில்: சி.எஸ்.தேவநாதன்; பக்.176; ரூ.100; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-642002 பொருளாதாரத்துறையில் நோபல் பரிசு பெற்றவர் அமர்த்தியா சென். இந்நூல் அவருடைய வாழ்க்கையையும், சிந்தனைகளையும் விரிவாகச் சொல்கிறது. பொருளாதாரவியல் வெறும் பொருளாதாரத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல, அது தத்துவம், மனிதநேயம் ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டது என்பது அமர்த்தியா சென்னின் கருத்து. பொருளாதார நிபுணர் என்ற அளவில் நின்றுவிடாமல், ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் போன்றவற்றிலும் அவர் அக்கறையுள்ளவராக இருந்தார் என்பதை நூல் விவரிக்கிறது. “சோஷியல் சாய்ஸ்’ […]

Read more
1 6 7 8