வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள், தி இந்து தமிழ், சென்னை, விலை 250ரூ. தமிழ் சினிமா பற்றிய முக்கியமான புத்தகம் இது. யுடிவி நிறுவனத்தின் தென்னகப் பிரிவுத் தலைவரான கோ. தனஞ்செயன், இதை எழுதியுள்ளார். படத்தயாரிப்பு, பட விநியோகம் மற்றும் திரைப்படத்துறையின் சகல பிரிவுகளில் நேரடி அனுபவம் உடையவர் இவர். தமிழில் இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்படங்கள் வெளிவந்துள்ளன. திரையில் பார்த்த படங்களைத்தவிர, முக்கியமான பழைய படங்களையும் டிவிடி மூலம் பார்த்தவர். படங்களின் வெற்றி தோல்வி பற்றி பல கோணங்களில் ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். இந்தப் […]

Read more

நீராதிபத்தியம்

நீராதிபத்தியம், சா. சுரேஷ், எதிர் வெளியீடு. கனடாவைச் சேர்ந்த மாட் விக்டோரியா பார்லோவின் Blue Covenant நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சா. சுரேஷ். உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தண்ணீர் அரசியலின் பன்முகப் பரிமாணங்களை பொளேரென உணர்த்தும் நூல். ரோஜாப் பூ வணிகத்துக்காக ஓர் ஏரியின் நீராதாரத்தை யானைகளுக்கு மறுப்பது முதல், சாமானியனுக்கு குடிநீர் வழங்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையைச் செயலாக்குவது வரை புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், நீர் அருந்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, நீங்கள் குடிநீர் குழாயை […]

Read more