மருக்கொழுந்து – 2 தொகுதிகள்

மருக்கொழுந்து – 2 தொகுதிகள், கொத்தமங்கலம் சுப்பு கவிதைகள், லஷ்மி இராமச்சந்திரன், மீனாட்சி பதிப்பகம், விலைரூ.800 தில்லானா மோகனாம்பாள் என்ற கதையை எழுதியவர் பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு. அந்த கதை தமிழகத்தை கலக்கியது. சினிமாகவும் வந்து கவர்ந்தது. அவர் சிறந்த கவிஞராகவும் இருந்தார். அவர் புனைந்துள்ள கவிதைகளை, தொகுத்து நுாலாக்கியுள்ளார், அவரது மகள் லஷ்மி. இரு புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதியாக உள்ள புத்தகத்தில், பண்டிகை, அறிவுரை, காதல், நாட்டு நடப்பு, நாட்டுப்பற்று என்ற பொருண்மைகளை பேசுகிறது. எளிய நடையில் அமைந்துள்ளன. ‘கார் […]

Read more

கல்விச்செல்வம் தந்த காமராசர்

கல்விச்செல்வம் தந்த காமராசர், ஈசாந்திமங்கலம் முருகேசன், மீனாட்சி பதிப்பகம், விலை 160ரூ. தமிழ்நாடு கல்வியில் முன்னேற அரும்பாடுபட்டு, அதில் வெற்றியும் கண்டவர் பெருந்தலைவர் காமராஜர். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஏறத்தாழ 10 ஆண்டுகள் பதவி வகித்தார். அது ஒரு பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. இலவச கல்வி, இலவச மதிய உணவு திட்டம் ஆகியவற்றுக்கு முன்னோடி. அரசியல் வாழ்க்கையில் தூய்மையை கடைப்பிடித்தவர். “கிங்மேக்கர்” (அதாவது பல பிரதமர்களை உருவாக்கியவர்) என்று புகழ் பெற்றவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார், ஈசாந்திமங்கலம் முருகேசன். படிக்க வேண்டிய […]

Read more

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள், தி இந்து தமிழ், சென்னை, விலை 250ரூ. தமிழ் சினிமா பற்றிய முக்கியமான புத்தகம் இது. யுடிவி நிறுவனத்தின் தென்னகப் பிரிவுத் தலைவரான கோ. தனஞ்செயன், இதை எழுதியுள்ளார். படத்தயாரிப்பு, பட விநியோகம் மற்றும் திரைப்படத்துறையின் சகல பிரிவுகளில் நேரடி அனுபவம் உடையவர் இவர். தமிழில் இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்படங்கள் வெளிவந்துள்ளன. திரையில் பார்த்த படங்களைத்தவிர, முக்கியமான பழைய படங்களையும் டிவிடி மூலம் பார்த்தவர். படங்களின் வெற்றி தோல்வி பற்றி பல கோணங்களில் ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். இந்தப் […]

Read more

நீராதிபத்தியம்

நீராதிபத்தியம், சா. சுரேஷ், எதிர் வெளியீடு. கனடாவைச் சேர்ந்த மாட் விக்டோரியா பார்லோவின் Blue Covenant நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சா. சுரேஷ். உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தண்ணீர் அரசியலின் பன்முகப் பரிமாணங்களை பொளேரென உணர்த்தும் நூல். ரோஜாப் பூ வணிகத்துக்காக ஓர் ஏரியின் நீராதாரத்தை யானைகளுக்கு மறுப்பது முதல், சாமானியனுக்கு குடிநீர் வழங்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையைச் செயலாக்குவது வரை புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், நீர் அருந்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, நீங்கள் குடிநீர் குழாயை […]

Read more