வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள், தி இந்து தமிழ், சென்னை, விலை 250ரூ.

தமிழ் சினிமா பற்றிய முக்கியமான புத்தகம் இது. யுடிவி நிறுவனத்தின் தென்னகப் பிரிவுத் தலைவரான கோ. தனஞ்செயன், இதை எழுதியுள்ளார். படத்தயாரிப்பு, பட விநியோகம் மற்றும் திரைப்படத்துறையின் சகல பிரிவுகளில் நேரடி அனுபவம் உடையவர் இவர். தமிழில் இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்படங்கள் வெளிவந்துள்ளன. திரையில் பார்த்த படங்களைத்தவிர, முக்கியமான பழைய படங்களையும் டிவிடி மூலம் பார்த்தவர். படங்களின் வெற்றி தோல்வி பற்றி பல கோணங்களில் ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தின் மூலம் திரைப்படங்களின் வெற்றி ரகசியத்தை அறிய முடிகிறது. அது மட்டுமல்ல, தமிழில் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கி 85 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலக்கட்டத்தின் திரைப்பட வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. நிறைய படங்களுடன் கூடிய அழகிய பதிப்பு. நன்றி: தினத்தந்தி, 11/2/2015.  

—-

நம் ஊன் உடம்பு ஓர் ஆலயம், அ.சொ.சுப்பையா, மீனாட்சி பதிப்பகம், சிதம்பரம், விலை 155ரூ.

தியானப்பயிற்சி, திருக்கோவில் வழிபாடு, துன்ப நீக்கம், இன்பப் பெருக்கம், அலைகள் ஓய்ந்த அமைதி, ஆண்டவனின் அரவணைப்பு என அரிய பல பயன்களை உணர்த்துகிற சைவக் கருவூலமாக இந்த நூல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 11/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *