நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க

நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க, பி.ஆர். ஜெயராஜன், ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ், சேலம், பக். 144, விலை 75ரூ.

நமது வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் சில பழமொழிகளுக்கான விளக்கங்கள், பிறருக்குத் தொந்தரவு கொடுக்காமல் எவ்வாறு செயல்படுவது, ஒட்டுக் கேட்பதால் ஏற்படும் விபரீதம், பொதுத் துறையில் பணியிலிருக்கும் அரசு ஊழியரின் அசாதாரண செயல்கள், மனைவியின் மொழியைக் கணவர் புரிந்து கொள்வது எப்படி, மனைவியின் கொடுமையிலிருந்து கணவனைக் காப்பதற்கான சட்டங்களின் அவசியம், கடன் அட்டை வங்கியிலிருந்து அனுப்பப்படும்போது, அந்த அட்டை அடங்கிய உறை நன்கு மூடி முத்திரையிடப்பட்ட நிலையில் உள்ளதா, உள்ளே இருக்கும் வங்கிக் கடிதத்துடன் அக்கடன் அட்டை ஒட்டி அனுப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற கடன் அட்டை குறித்து சில எச்சரிக்கை தகவல்கள் என அன்றாடம் வாழ்க்கைப் பயன்படும் பல அரிய தகவல்கள் நிரம்பிய நூல். நன்றி: தினமணி, 6/1/2015.  

—-

இதுதாண்டா உலகம், செ. நல்லசாமி வெளியீடு, ஈரோடு, விலை 50ரூ.

சிறு சிறு கட்டுரைகளின் தொகுப்பு நூல். எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு துறையிலும் நன்மைகளும், தீமைகளும் கலந்தே இருக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறார் நல்லசாமி. நன்றி: தினத்தந்தி, 11/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *