அமர்த்தியா சென் – சமூக நீதிப் போராளி

அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி – ரிச்சா சக்சேனா; தமிழில்: சி.எஸ்.தேவநாதன்; பக்.176; ரூ.100; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-642002 பொருளாதாரத்துறையில் நோபல் பரிசு பெற்றவர் அமர்த்தியா சென். இந்நூல் அவருடைய வாழ்க்கையையும், சிந்தனைகளையும் விரிவாகச் சொல்கிறது. பொருளாதாரவியல் வெறும் பொருளாதாரத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல, அது தத்துவம், மனிதநேயம் ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டது என்பது அமர்த்தியா சென்னின் கருத்து. பொருளாதார நிபுணர் என்ற அளவில் நின்றுவிடாமல், ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் போன்றவற்றிலும் அவர் அக்கறையுள்ளவராக இருந்தார் என்பதை நூல் விவரிக்கிறது. “சோஷியல் சாய்ஸ்’ […]

Read more

சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள்

சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள் – கமலா கந்தசாமி; பக். 128; ரூ. 60; நர்மதா பதிப்பகம், சென்னை – 17 ‘வாழ்க்கையைப் பற்றியே உனக்கு ஒன்றும் தெரியாதபோது..மரணம் பற்றி நீ என்ன தெரிந்துகொள்ள முடியும்?’ – இது “மரணத்துக்கு பின்பான உலகம்’ பற்றிய தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட ஒருவனிடம் சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் கேட்ட கேள்வி. இதுபோன்ற கன்ஃபூஷியஸின் அரிய தத்துவ முத்துகளை உரிய விளக்கங்களுடன் 42 தனித்தனி அத்தியாயங்களாக இந்நூலில் தந்திருக்கிறார் கமலா கந்தசாமி. ஓரிடத்தில் அந்த ஞானி கூறுகிறார், ‘நீ […]

Read more