கேரக்டர் (பாகம் 1)

கேரக்டர் (பாகம்-1), கலைஞானம், பக்.336; ரூ.280- (பாகம்-2) நக்கீரன் வெளியீடு, பக். 328; விலை: ரூ.280;  திரைப்பட கதாசிரியர், நடிகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறன் கொண்ட கலைஞானம் எழுதிய திரையுலக அனுபவங்களின் தொகுப்பு. சென்னை பாண்டிபஜாரில் கார் ஓட்டுநர்கள் 4 பேர் சினிமா கனவுகளுடன் இருந்தார்கள்.அவர்களின் கனவு நிறைவேறியதா… என்பதை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். அந்த 4 பேரில் ஒருவரான பாலகிருஷ்ணன் என்கிற கலைஞானம். கே.பாக்யராஜின் “இது நம்ம ஆளு” படத்தில் ஐயர் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர். […]

Read more

சினிமா சீக்ரெட்

சினிமா சீக்ரெட், கலைஞானம், நக்கீரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சினிமா உலகில் நீண்ட அனுபவம் உடையவர் கலைஞானம். பட அதிபர், கதாசிரியர், வசன கர்த்தா, டைரக்டர் என்று பல முகம் படைத்தவர். பாதி கதை படமாக்கப்பட்ட பிறகு, சில படங்கள் மேலே நகர முடியாமல் நின்று விடுவது உண்டு. அப்போது கதையை ரிப்பேர் செய்ய பட அதிபர்கள் இவரைத்தான் அழைப்பார்கள். கலைஞானம் தமது அனுபவங்களை சினிமா சீக்ரெட் என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி வருகிறார். அவற்றை புத்தகங்களாக நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. […]

Read more