சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல்

சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல், டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, பக். 1560, விலை 1500ரூ. மருத்துவத் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு உதவும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். கேள்வி – பதில் தொகுப்பாக உள்ளது. மத்திய, மாநில அரசு பணிகளில் சேர தேர்வு எழுதுவோருக்கும் உதவும். சுலபமாக பயன்படுத்த வசதியாக மூன்று புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்ந்த மருத்துவக் குழு தயாரித்துள்ளது. சித்த மருத்துவம் தொடர்பான துல்லிய விபரங்கள், கேள்வி – பதில் வடிவில் உள்ளது. தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் […]

Read more

என் இதயமே நீ நலமா?

என் இதயமே நீ நலமா?, டாக்டர் ஒய். ஆர். மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 128, விலை 80ரூ. உடல் நலனில், இதயத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இதய நலனுக்கான, சித்தா மருத்துவ நுால். இதயத்தின் இயக்கம், இதய நோய் வகை, உணவில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை, உடற்பயிற்சி, தியானம் என, பல்வேறு தகவல்கள், இந்நுால் நிரம்பியுள்ளன. இதய நோய்க்கான, சித்தா மருத்துவமுறைகளும், அதை தயாரிக்கும் வழிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன. சித்தா மருத்துவமுறைகளை பின்பற்றுவோருக்கு, இந்நுால் முக்கியமானது. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

காமாலை கல்லீரல் நோய்களுக்கு சித்த மருத்துவம்

காமாலை கல்லீரல் நோய்களுக்கு சித்த மருத்துவம், டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.160, விலை 100ரூ. கல்லீரல் என்பது வயிற்றுப் பகுதியின் வலதுபுறத்திலிருந்து இடதுபுறம் வரை பரவிஇருக்கும், மனித உடலின் உள்ளுறுப்புகளில் மிகவும் பெரியது மட்டுமல்ல, இயற்கையாகவே தன்னைத் தானே சரி செய்யக்கூடிய உறுப்புமாகும். கல்லீரலின் செயல்பாடுகள், அதனால் வரும் நோய் நிலைகள், அவற்றை சீர் செய்வதில் நவீன மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தின் பங்களிப்புகளை விரிவாக விளக்குகிறது இந்நுால். மேலும், கல்லீரல் செயலிழப்பின் சிக்கல்களையும், அதை குணப்படுத்தும் மூலிகைகளையும் எளிய நடையில் […]

Read more

என் இதயமே நீ நலமா?

என் இதயமே நீ நலமா?, டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 80ரூ. இதயம், மனிதனை இயங்கச் செய்கின்ற தொழிற்சாலை. இத்தகைய சிறப்பு பெற்ற இதயம் எவ்வாறு இயங்குகின்றது? இதயத்தில் வருகின்ற நோய் நிலைகள், அதைத் தடுக்கும் வழிமுறைகள், எத்தகைய உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்? என்பன போன்ற கருத்துகளை நவீன விஞ்ஞான மருத்துவப் பார்வையிலும், அன்றைய சித்தர்கள் காட்டிய வழியிலும் இந்த நூலில் டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா அழகிய முறையில் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

காமாலை கல்லீரல் நோய்களுக்கான சித்த மருத்துவம்

காமாலை கல்லீரல் நோய்களுக்கான சித்த மருத்துவம், டாக்டர் ஒய். ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 160, விலை 100ரூ. கல்லீரல் என்பது வயிற்றுப் பகுதியின் வலதுபுறத்திலிருந்து இடதுபுறம் வரை பரவிஇருக்கும், மனித உடலின் உள்ளுறுப்புகளில் மிகவும் பெரியது மட்டுமல்ல, இயற்கையாகவே தன்னைத் தானே சரி செய்யக்கூடிய உறுப்புமாகும். கல்லீரலின் செயல்பாடுகள், அதனால் வரும் நோய் நிலைகள், அவற்றை சீர் செய்வதில் நவீன மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தின் பங்களிப்புகளை விரிவாக விளக்குகிறது இந்நுால். மேலும், கல்லீரல் செயலிழப்பின் சிக்கல்களையும், அதை குணப்படுத்தும் மூலிகைகளையும் […]

Read more