தமிழ் நாவல்கள்

தமிழ் நாவல்கள், பொன்னீலன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.232, விலை ரூ.220. உலகில் ஏற்படும் மாற்றங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மக்களின் மனநிலை, பண்பாடு, ஆதிக்கத்தன்மை, அடிமைத்தளை, பொருளாதாரநிலை, உணர்ச்சிகள், ரசனைகள், பழக்க, வழக்கங்கள் எல்லாவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாவல்களின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், பன்முகத்தன்மைகளுக்கும் கூட இந்த மாற்றங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த அடிப்படையில் தமிழில் தோன்றிய முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் தொடங்கி, சமகாலத் தமிழ் நாவல்கள் வரை இந்நூல் அறிமுகம் செய்வதுடன், நாவல்களின் உள்ளடக்கம், அவை […]

Read more

கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன்

கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன், பொன்னீலன், சீதை பதிப்பகம், பக்.264, விலை ரூ.250. சமூக அக்கறை மிகுந்த எழுத்தாளராக அறியப்பட்ட பொன்னீலன், கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நூலில் அவர் கல்வித்துறையில் ஏற்ற பணிகளைப் பற்றியும், அதில் கிடைத்த அனுபவங்களைப் பற்றியும் மிகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார். மதுரை தியாகராசர் மாதிரிப் பள்ளியில் முதன் முதலில் கணிதப் பாடம் எடுத்த அனுபவத்துடன் தொடங்குகிறது அவர் கல்விப் பயணம். 1962 – இல் மதுரையில் உள்ள விருதுநகர் இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்கிறார். ஆனால் […]

Read more

சுடர்கள் ஏற்றும் சுடர்

சுடர்கள் ஏற்றும் சுடர், பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 180, விலை 160ரூ. பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் வழக்காற்றியலின் தந்தை. மார்ச்சிய லெனினிய அகராதி, தமிழர் நாட்டுப் பாமரர் பாடல்கள், தமிழர் நாட்டுப் பாடல்கள், புதுக்கவிதை – முற்போக்கும் பிற்போக்கும் – போன்ற அவரது நுால்கள் தமிழுக்கு சிறந்த பங்களிப்புகள். அவரது அன்றாட வாழ்க்கை, ரசனைகள், குறைகள், சாதனைகள், வேதனைகள், அவரைப் பற்றிய மதிப்பீடுகள் ஆகியவை பொன்னீலனால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் புதுக்கவிதை இடதுசாரி விமர்சகர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. தொ.மு.சி.ரகுநாதன், கலாநிதி […]

Read more

சுடர்கள் ஏற்றும் சுடர்

சுடர்கள் ஏற்றும் சுடர்,  பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.190, விலை ரூ.160. தமிழிலக்கிய ஆராய்ச்சி, முற்போக்கு இலக்கிய விமர்சனம், நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுக்கும் முயற்சி என்று பல தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர் பேராசிரியர் நா.வானமாமலை. 1969 -இல் தமிழ் இலக்கிய, தமிழக வரலாற்று ஆராய்ச்சிக்காக அவர் தொடங்கி நடத்திய ஆராய்ச்சி இதழின் பங்களிப்பை யாரும் மறந்துவிட முடியாது. இந்நூலாசிரியர் பொன்னீலன், தனது இளமைப் பருவத்தில் இருந்தே நா.வானமாமலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து பல இயக்கங்களில், […]

Read more