கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம்

கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம், ப.குணசேகர், பண்புப் பதிப்பகம், பக். 192, விலை 150ரூ. கால்பந்தாட்ட வரலாறு என்ன? அதன் தோற்றம் எப்போது என்பதை ஆண்டு அடிப்படையில் அடுக்கடுக்காக எழுதியிருப்பது, இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது. களத்தில் தனிநபராக நின்று, எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரர்களைப் பற்றிய செய்திகளோடு, நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் கதாபாத்திரங்களை கால்பந்தாட்ட வீரர்களாகவும் ரசிகர்களாகவும் சித்தரித்து, நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார், நுாலாசிரியர் குணசேகர். நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

காதல் ஒரு மின்னல் போர்

காதல் ஒரு மின்னல் போர், ப. குணசேகர், பண்புப் பதிப்பகம், பக். 128, விலை 70ரூ. உலகப் பெருங்கவிஞரான பாப்ளோ நெருதாவின் காதல் பாடல்களில் தனக்குக் கிடைத்தவற்றை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ப. குணசேகர். காதல் வாழ்க்கை தந்த அனுபவங்கள் கவிதை வடிவம் பெற்றுள்ளன. மக்கள் மொழியில் இருப்பதால் அவை மக்கள் மனதை எளிதில்கொள்ளை கொள்கின்றன. தமிழில் எழுதிய கவிதைகள் போலவே தந்து நெருதாவுக்கு சிறப்பு செய்துள்ளார் மொழிபெயர்ப்பாளர். நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும்

பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும், ப. குணசேகர், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 120ரூ. தென் அமெரிக்காவின், சிலி நாட்டுக் கவிஞன் பாப்லோ நெருதாவையும், தமிழன்பனையும் கவிதைகளால் உரசிப் பார்த்திருககிறார் நூலாசிரியர். மக்கள் கவிஞராக இருவரையும் பார்த்ததோடு மட்டும் அல்லாமல், இரு கவிஞர்களின் மேடைப் பிரம்மாண்டங்களையும் விரித்துப் படைத்துள்ளார். எட்டு தலைப்புகளில் இரு மொழிக் விஞர்களின் கவிதைகளைச் சாளரத்தின் வாயிலாகக் காட்டுகிறார். சில இடங்களில் கதவைத் திறந்தும் வெளிப்படுத்துகிறார். திறனாய்வு, விமர்சனம் எனும் எல்லைகளைக் கடந்து, இரண்டு பேரின் படைப்புகளையும் எடுத்து வைத்து, […]

Read more