கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம்

கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம், ப.குணசேகர், பண்புப் பதிப்பகம், பக். 192, விலை 150ரூ. கால்பந்தாட்ட வரலாறு என்ன? அதன் தோற்றம் எப்போது என்பதை ஆண்டு அடிப்படையில் அடுக்கடுக்காக எழுதியிருப்பது, இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது. களத்தில் தனிநபராக நின்று, எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரர்களைப் பற்றிய செய்திகளோடு, நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் கதாபாத்திரங்களை கால்பந்தாட்ட வீரர்களாகவும் ரசிகர்களாகவும் சித்தரித்து, நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார், நுாலாசிரியர் குணசேகர். நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

வாய்ப்பின் வாசலிலே வெற்றி

வாய்ப்பின் வாசலிலே வெற்றி, ப.குணசேகரன், பண்புப் பதிப்பகம், விலை 150ரூ. ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் என்பது எல்லோருக்குமே சரிசமமாகத் தரப்பட்டிருக்கும் நேரம். அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதே நம் வாசல் தேடி வெற்றியை வரவழைக்கிறது. புகழ்பெற்ற வெற்றியாளர்கள் பலர் சாதிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளை உதாரணம் காட்டி வெற்றிக்கு அஸ்திவாரம் போடச் சொல்லித் தருகிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 2/8/2017

Read more

காதல் ஒரு மின்னல் போர்

காதல் ஒரு மின்னல் போர், ப. குணசேகர், பண்புப் பதிப்பகம், பக். 128, விலை 70ரூ. உலகப் பெருங்கவிஞரான பாப்ளோ நெருதாவின் காதல் பாடல்களில் தனக்குக் கிடைத்தவற்றை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ப. குணசேகர். காதல் வாழ்க்கை தந்த அனுபவங்கள் கவிதை வடிவம் பெற்றுள்ளன. மக்கள் மொழியில் இருப்பதால் அவை மக்கள் மனதை எளிதில்கொள்ளை கொள்கின்றன. தமிழில் எழுதிய கவிதைகள் போலவே தந்து நெருதாவுக்கு சிறப்பு செய்துள்ளார் மொழிபெயர்ப்பாளர். நன்றி: குமுதம், 14/9/2016.

Read more