மருத்துவ மாயங்கள்

மருத்துவ மாயங்கள், டாக்டர் கு.கணேசன், காவ்யா பதிப்பகம். மருத்தவ உலகம் மிகவும் புதிரானது. டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டுகூட நோயாளிக்குப் புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற மருத்துவர்கள் வாழ்கிற இக்காலத்தில், 21-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், கண்டுபிடிப்புகள். நவீன சிகிச்சைகள் குறித்து எளிய தமிழில் எழுதியிருக்கிறார் மருத்துவ எழுத்தாளர் கு.கணேசன். மருத்துவச் சொற்களைக் கூறி நம்மை அச்சுறுத்தாமல், குடும்ப நண்பரைப் போன்று விஷயங்களை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

மருத்துவ மாயங்கள்

மருத்துவ மாயங்கள், டாக்டர் கு.கணேசன், காவ்யா, விலை 400ரூ. இந்த நூற்றாண்டின் மலைக்க வைக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சை முறைகளை எளிய தமிழில் தெளிவாக விளக்கும் நூல். சாதாரண மக்களின் மருத்துவ சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும், நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் எளிய தமிழில் எழுதி, எண்ணற்ற வாசகர் கூட்டத்தை உருவாக்கி இருப்பவர், மருத்துவ இதழியலாளர் டாக்டர் கு.கணேசன். தினமலர், ‘என் பார்வை’ பகுதியில் இவரது கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இதுவரை, 38 மருத்துவ புத்தகங்கள் எழுதி உள்ளார். அவற்றில் இருந்து […]

Read more