சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம்

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், காவ்யா பதிப்பகம், பக். 340, விலை 330ரூ. திருநெல்வேலியில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, புதுவையில் நாடகத் தமிழ் வளர்த்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவரின் எழுத்து, இயக்கம், பேச்சு, மூச்சு என அனைத்து செயல்களும் நாடகத்தமிழில்தான் இருந்தன. அவரால், நாடகத்தமிழ் புத்துயிர் பெற்றது. அவரை தற்கால தலைமுறை புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 10/1/2018.

Read more

கம்பனில் இசைத்தமிழ்

கம்பனில் இசைத்தமிழ், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், உமா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. இயற்பா – இசைப்பா இவற்றிற்குள்ள வேறுபாடு, இசைத்தமிழ் மரபு போன்றவற்றை விரிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். இசைத்தமிழ் மரபு என்னும் வித்து, தொல்காப்பிய காலத்திற்கு முன் விதைக்கப்பட்டு, சங்க காலத்தில் ஆழமாக வேரூன்றி, காப்பிய காலத்தில் முகிழ்ந்து வளர்ந்தோங்கி, கம்பராமாயணத்தில் மலர்ச்சோலையாக மணம் பரப்புகிறது என கூறுகிறார். இன்றைய இசையியலில் வழங்கி வருகிற தாளங்களுக்கான மூலவேர்கள் சங்க இலக்கியங்களில் வெகுவாக காணப்படுகின்றன. பண்டைக்கால இசைத்தமிழ் நூல்களில், 108 தாளங்களும், […]

Read more