தமிழர் மரபும் அறிவியல் பார்வையும்

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும், ச.இராமமூர்த்தி, லாவண்யா பதிப்பகம், பக்.160, விலை ரூ.150. பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழரின் வாழ்க்கை, சிந்தனை, இயற்கைச் சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றைப் பற்றிய அரிய விஷயங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அகநானூறு, நற்றிணை, பொருநராற்றுப்படை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் யாளி என்று கூறப்படுவது சிங்க முகம் கொண்ட கொடிய விலங்கு; 1800 ஆம் ஆண்டிற்குப் பிறகே அறிவியல் அணு பற்றிக் கூறத்தொடங்கியது. ஆனால் அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு […]

Read more

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும்

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும், ச.ராமமூர்த்தி, லாவண்யா பதிப்பகம், விலை 150ரூ. தொன்மை சிறப்பு வாய்ந்த சங்கச் சான்றோர் தொடங்கி இன்றைய கபிலன் வைரமுத்து வரை வாழையடி வாழை என வழிவந்த கவிஞர்களின் படைப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி தான் எழுதிய 16 கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார் பேராசிரியர் ச.ராமமூர்த்தி. முற்றிலும் திறனாய்வு கட்டுரைகளை கொண்ட இந்த நூல் கட்டமைப்பு, கருத்து வைப்பு, ஆய்வுநெறி மற்றும் முடிவுரைத்தல் ஆகிய 4 நிலைகளிலும் தனிசிறந்து நிற்கிறது. இந்நூல் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் வழிகாட்டியாக அமையும். […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், முனைவர் க.மங்கையர்க்கரசி, லாவண்யா பதிப்பகம், பக். 208, விலை 140ரூ. இந்த நுாலை எழுதியுள்ள தமிழ் பேராசிரியர், முனைவர் க.மங்கையர்க்கரசி, அறிவியல் துறையில் பேராசிரியரோ என்று எண்ணத் தோன்றும் வகையில், அறிவியல் கருத்துக்களைச் செறிவான முறையில் தொகுத்தும் வகுத்தும் விளக்கியும் கூறியுள்ள முறை, கற்போருக்கு ஆர்வத்தைத் தருகிறது. சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம், பட்டினத்தார் பாடல்கள் முதலிய நுால்களில் பொதிந்து கிடக்கும் அறிவியல் கருத்துக்களை, மருத்துவ இயல், மரபியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் கணிதவியல், […]

Read more

பன்முக நோக்கில் தொல்காப்பியம்

பன்முக நோக்கில் தொல்காப்பியம், வா.மு.சே. ஆண்டவர், லாவண்யா பதிப்பகம், விலை 140ரூ. தமிழில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். இதுபற்றி, பல்வேறு தமிழறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார், முனைவர் வா.மு.சே. ஆண்டவர். தமிழின் அருமை, பெருமை பற்றி இந்நூலில் வா.மு.சே. ஆண்டவர் எழுதியிருப்பதாவது “உலகத்தின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர், 90 வயது ஆகியும் மொழியியல் ஆராய்ச்சியில் கொடிகட்டிப் பறக்கும் நேர்ம்ச்ம்ஸ்கி என்ற அமெரிக்க அறிஞர், உலகின் பழமையான மொழிகள் இரண்டு என்றும், அதில் ஒன்று தென் ஆப்பிரிக்காவில் […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவில் சிந்தனைகள்

பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவில் சிந்தனைகள், லாவண்யா பதிப்பகம்,விலை 140ரூ. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதை முனைவர் க. மங்கையர்க்கரசி இந்த நூலில் ஆய்வுக் கண்ணோட்டத்தில் அலசி இருக்கிறார். மருத்துவயியல், கருவியல், மரபியல், இயற்பியல், அணுவியல், கணிதவியல், வானியல் என்பன போன்ற 12 தலைப்புகளில் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அறிவியல் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more