இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர்

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் (வாழ்வும் படைப்பும்), சேவியர், தோழமை வெளியீடு, பக். 184, விலை 150ரூ. பாலசந்தரைப் பல பரிமாணங்களில் அறிமுகப்படுத்தும் அற்புதமான புத்தகம். ஒரு பிலிம் மேக்கர் நாட்டுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும், கெட்டதை செய்துவிடக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக கே.பி.யே சொல்லி இருக்கிறார். பெண்களை மையப்படுத்திப் பல கதைகளைச் சொன்னவர். நடிகர்கள் கொடி கட்டி பறந்த காலத்திலேயே அவர் படத்தில் நட்சத்திரங்கள் இருந்தது இல்லை. அவர் தன், எழுத்தையே நம்பினார். அவர் இயக்கிய, ஏக் துஜே கேலியே இந்திப் […]

Read more

வாழ்விக்க வந்த காந்தி

வாழ்விக்க வந்த காந்தி, ரொமெய்ன் ரோலந்து, தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 150ரூ. ரொமெய்ன் ரோலந்து என்ற, பிரெஞ்சு பேரறிஞர் எழுதிய மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில நூலினை, புகழ்மிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழில் தந்திருக்கிறார். மொழிபெயர்க்கும் பணியில் தமது துணைவி திருமதி ஜெயஜனனி, பெரிதும் உதவியது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். மகாத்மாவின் அருங்குணங்கள், சுதந்திரப் போராட்டம் தொடர்பான அவருடை பல்வேறு செயற்பாடுகள், சத்யாக்கிரக நிகழ்வுகளில் அவர் பின்பற்றிய விதிமுறைகள், பிறர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு காந்தி அளித்த பதில்கள், […]

Read more