ஸ்ரீபரப்பிரம்ம ரகசியம்

ஸ்ரீபரப்பிரம்ம ரகசியம், வி.என்.கஜேந்திர குருஜி, ஸ்ரீபரப்பிரம்மம் ஐந்தியல் ஆய்வு மையம் வெளியீடு, பக். 1279, விலை 800ரூ. உலகின் முதல் ஆண்மகன் யார்? நூல் துவக்கத்திலேயே, ‘விராட் விஸ்வப் பிரம்மம்’ என்ற முழுமுதற்கடவுளைப் பற்றிய விளக்கத்தைத் தந்திருக்கிறார் ஆசிரியர். அது ஆணுமல்ல. பெண்ணுமல்ல. இரண்டிற்கும் பொதுவான அலித்தன்மையில் அமைந்தது. அந்தப் பிரம்மத்திலிருந்து, ஐந்துவித பருவகாலமும் ஒருங்கே சேர்ந்தபோது, உலகின் முதல் ஆண்மகன் என்று பிறந்தவர் விஸ்வகர்மா. அதேபோல், அந்தப் பிரம்மத்திலிருந்து ஜனித்த முதல் ஒரே பெண். விஸ்வகர்மிணி எனும் ஸ்ரீகாயத்ரி. இந்த இருவரும் இணைந்து, […]

Read more

அறிந்தும் அறியாமலும்

அறிந்தும் அறியாமலும், வானவில் வெளியீடு, சென்னை, விலை 190ரூ. பேராசிரியரும், சொற்பொழிவாளருமான சுப. வீரபாண்டியன் எழுதி இணைய தளத்தில் 33 வாரங்கள் வெளியான தொடர், அறிந்தும் அறியாமலும் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இன்றைய நம் இளைஞர்களின் கணிப்பொறி அறிவும், தொழில் நுட்ப அறிவும் நம்மை வியக்கவைக்கின்றன. இத்தகைய இளைஞர்களி இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளைப் பற்றி சிறிதும் அறியாமல் இருக்கிறார்கள். இதற்கு ஒரு தலைமுறை இடைவெளியே காரணம் என்று கூறும் ஆசிரியர், முதியவர்களின் பட்டறிவும், இளைஞர்களின் செயல் திறனும் இணையும் புள்ளியில் […]

Read more