அறிந்தும் அறியாமலும்
அறிந்தும் அறியாமலும், வானவில் வெளியீடு, சென்னை, விலை 190ரூ.
பேராசிரியரும், சொற்பொழிவாளருமான சுப. வீரபாண்டியன் எழுதி இணைய தளத்தில் 33 வாரங்கள் வெளியான தொடர், அறிந்தும் அறியாமலும் என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இன்றைய நம் இளைஞர்களின் கணிப்பொறி அறிவும், தொழில் நுட்ப அறிவும் நம்மை வியக்கவைக்கின்றன. இத்தகைய இளைஞர்களி இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளைப் பற்றி சிறிதும் அறியாமல் இருக்கிறார்கள். இதற்கு ஒரு தலைமுறை இடைவெளியே காரணம் என்று கூறும் ஆசிரியர், முதியவர்களின் பட்டறிவும், இளைஞர்களின் செயல் திறனும் இணையும் புள்ளியில் அதிசயம் பிறக்கும் என்று அதற்கு விடையும் காண்கிறார். இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 25/2/2015.
—-
ஸ்ரீபரப்பிரம்ம ரகசியம், வி.என். கஜேந்திரகுருஜி, ஸ்ரீபரப்பிரம்மம் ஐந்தியல் ஆய்வு மையம், சென்னை, விலை 800ரூ.
இந்திய பண்பாடு, இறைநெறி ஆகியவற்றை இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பினரும் மற்றும் வெளிநாட்டவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில், தத்துவ விளக்கங்கள் உள்பட ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆன்மிக செய்திகள், புராண வரலாறுகள், வழிகாட்டுக்குரிய மந்திரங்கள், வழிபாட்டு முறைகள், புண்ணிய தலங்கள் பற்றிய தகவல்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி கலைக்களஞ்சியம் போல் திகழ்கிறது. இத்துடன் இடம் பெற்றுள்ள 1077 ஆன்மிக செய்திகளின் தொகுப்பு. ஆன்மிக பட விளக்கங்கள் ஆகியவையும் அனைவரும் படித்து பயன் பெறும் வகையில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 25/2/2015.