தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலை 320ரூ.

தமிழ் இதழியல் உலகில், பொது அறிவு களஞ்சியமாக வெளிவந்தது, ‘கல்கண்டு’ வார இதழ். அந்த இதழ் மலர துவங்கிய காலத்தில் இருந்தே, தமிழ்வாணனின், ‘என்னை கேளுங்கள்’ என்ற கேள்வி – பதில் பகுதி துவங்கியது. அப்பகுதி, தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், நகைச்சுவை, பொது என, மூன்று பிரிவுகளில், கேள்வி – பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

‘காமராஜருக்கு, சொந்த ஊரான விருதுநகரில், அவருக்கு மதிப்பு உண்டா’ என்ற கேள்விக்கு, ‘ஆப்பிள் பழம், காய்த்து கனிந்த மரத்தடியில் மதிக்கப்படுவதை விட, மற்ற இடங்களில் தான், அது வெகுவாக மதிக்கப்படுகிறது’

‘அண்ணாதுரைக்கு அடுத்து யார்’ என்ற கேள்விக்கு, ‘தம்பி தான்; கருணாநிதியைத் தான், எல்லாரும் தம்பி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’ என, பல அரசியல் கேள்விகளுக்கு, தமிழ்வாணன் தீர்க்கதரிசனமாய் பதில் அளித்திருப்பது வியப்பளிக்கிறது. அந்த கால அரசியல் ஓட்டத்தையும், சமூக நடப்பையும் எளிதில் புரிந்து கொள்ள, இப்புத்தகம் உதவும்.

– சி.சுரேஷ்.

நன்றி: தினமலர், 29/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *