தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், பக். 231, விலை 135ரூ.

தமிழ்நாட்டை கி.பி. 300 முதல் கி.பி. 600 வரை களப்பிரர்கள் ஆண்டார்கள் என்று அறியப்படுகிறது. இந்த 300 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் வரலாறு எப்படி இருந்தது என்பதை அறியாத நிலை வரலாற்று ஆய்வாளர்களுக்கே இருந்து வந்தது. அதனால் அந்த காலகட்டத்தை ‘இருண்ட காலம்’ என்று வர்ணித்தனர்.

‘வேள்விக்குடிச் செப்பேடு’ மூலமாக களப்பிரர் பற்றிய செய்திகளுக்கு விடை கிடைத்தது. அவர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்கள் தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் தொடக்கத்தில் தோற்கடித்த மன்னர்கள் யார்? போன்ற விவரங்களை இந்த நூலில் டி.கே. ரவீந்திரன் விரிவாக விளக்கியுள்ளார்.

களப்பிரர் காலத்தில் சமணம், பவுத்தம் ஆகிய மதங்கள் சிறப்புற்று இருந்தன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலான நூற்கள் களப்பிரர் காலத்தில் எழுதப்பட்டவை என்று பல அரிய தகவல்களை ஆய்வு நோக்கில் இந்த நூல் சொல்கிறது.

நன்றி: தினத்தந்தி, 28/9/2016.

Leave a Reply

Your email address will not be published.