ஆ. பத்மநாபன்

ஆ. பத்மநாபன், பசுபதி தனராஜ், தாய்த் தமிழ் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-189-0.html மாதம், 17 ரூபாய் ஊதியம் பெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் ஏழு குழந்தைகளில் ஒருவர், தினமும் 10 கி.மீ. நடந்து வந்து பள்ளியில் படித்தவர், அனைத்து இந்தியாவிலும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற முதல் தலித் மகன், தலைமைச் செயலர், கவர்னர் என உழைப்பால் உயர்ந்தவர். உலகக் கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த ஆட்சியாளர் என்ற ஆளுமையின் உயர்ந்த அத்தனை பரிமாணங்களும் கொண்ட சாதனையாளர் வேறு யாருமல்ல டாக்டர் ஆ. பத்மநாபன்தான் என்பதை இந்த நூல் இனிதாக விளக்குகிறது. திருச்சியில் பத்மநாபன் சப்-கலெக்டராக இருந்தபோது, நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு கட்டித் தந்தார். தவறுகளைத் தண்டித்தும், தவறு செய்பவரை மன்னித்தும், அவர் ஆற்றிய பல ஆட்சி முறைகள் இன்றைய ஆட்சியாளருக்கு பாடநூலாகவும் இந்நூல் திகழ்கிறது. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 18/5/2014.  

—-

 ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்- மர்மக் கதைகள், பெரு. முருகன், விகடன் பிரசுரம், பக். 199, விலை 110ரூ.

To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-206-7.html ஹாலிவுட் திரையுலகில் முக்கியமான தடம் பதித்திருப்பவர், திகில் மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். அவர் கதை எழுதி, பின்னர் படங்களாக வந்த, சைக்கோ, பேர்ட்ஸ், 30 ஸ்டெப்ஸ் படங்கள் இன்றும் உலகையே திகிலில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. அவர், 300க்கும் மேற்பட்ட திகில் கதைகளை எழுதியுள்ள்ர். அதில் 11 கதைகளை தேர்ந்தெடுத்து தமிழில் ஆல்ஃப்ரட்ஹிட்ச்காக் மர்மக் கதைகள் என்ற தலைப்பில் பெரு. முருகன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். அனைத்திலும் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ஆளுமை, திரைப்பட காட்சி போலவே காட்டுகிறார் எழுத்தாளர். மொழி பெயர்த்தலில் உள்ள சவால்களை எளிதில் கடந்து செல்கிறார். -சி. சுரேஷ். நன்றி: தினமலர், 18/5/2014.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *