இசையில் நனையும் இறைவன்

இசையில் நனையும் இறைவன், டாக்டர் பாரதி மாடசாமி, சபரீஷ் பாரதி வெளியீடு, சென்னை, பக். 144, விலை 100ரூ.

சிலப்பதிகாரத்தில் இசை வழிபாடு, ஆழ்வார்கள் வளர்த்த இசை வழிபாடு, பக்தி இயக்க வரலாறு, திருவிளக்கு வழிபாட்டில் பஜனை, இக்காலப் பஜனை ஒலி நாடாக்களில் பஜனை, என்றெல்லாம் பல்வேறு தலைப்புகளில் இசையால் எப்படி இறைவனை வழிபடுகின்றனர் என்பதை, ஆசிரியர் அழகுறச் சொல்லிச் செல்கிறார். இசை இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 18/5/2014.  

—-

ஸந்தேக நிவாரணி பாகம் 7, ராஜகோபால கனபாடிகள், விலை 150ரூ.

இந்த நூல் வைதீகத்தை தினமும் பின்பற்றும் சிலருக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வினா விடையாக உள்ளது. பரிகாரங்கள், கோவிலில் வழிபாடு, சிறப்பு யாகங்கள் போன்றவற்றை மேற்கொள்ளும் பலருக்கு எழும் சந்தேகங்களுக்கு, தர்மசாஸ்திர அணுகுமுறையில் விடைகள் தரப்பட்டிருக்கின்றன. -ஜனகன். நன்றி: தினமலர், 18/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *