குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள்

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள், ஜெகாதா, சபரீஷ் பாரதி வெளியீடு, பக். 128, விலை 80ரூ. ஒரு போர் பற்றிய தகவல்கள் எந்தளவுக்கு பரபரப்பை கிளப்பி விடுகின்றனவோ, அதேபோல்தான், போர் குறித்த புகைப்படங்களும். ஆனால் செய்யதிகளைவிட அவை, மக்களிடம் ஒருவித அச்சத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்துவதில் முன்னிற்கின்றன. அப்படி போர்களில் உயிரை துச்சமாக மதித்து, கேமராக்களுடன் ஓடி, போரின் பாதிப்புகள், மனித உரிமைமீறல்கள், பரிதாபம், கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்த, 50 புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை பதிவு தான் இந்த நூல். அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் […]

Read more

இசையில் நனையும் இறைவன்

இசையில் நனையும் இறைவன், டாக்டர் பாரதி மாடசாமி, சபரீஷ் பாரதி வெளியீடு, சென்னை, பக். 144, விலை 100ரூ. சிலப்பதிகாரத்தில் இசை வழிபாடு, ஆழ்வார்கள் வளர்த்த இசை வழிபாடு, பக்தி இயக்க வரலாறு, திருவிளக்கு வழிபாட்டில் பஜனை, இக்காலப் பஜனை ஒலி நாடாக்களில் பஜனை, என்றெல்லாம் பல்வேறு தலைப்புகளில் இசையால் எப்படி இறைவனை வழிபடுகின்றனர் என்பதை, ஆசிரியர் அழகுறச் சொல்லிச் செல்கிறார். இசை இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 18/5/2014.   —- ஸந்தேக நிவாரணி பாகம் 7, ராஜகோபால கனபாடிகள், […]

Read more