சிந்தனைச் சுரங்கம்

சிந்தனைச் சுரங்கம் (முதல் பாகம்), கா. திரவியம், பூம்புகார் பதிப்பகம், பக். 432, விலை 425ரூ. தமிழக முன்னாள் தலைமை செயலர் அமரர் கா. திரவியம் இ.ஆ.ப. நான்கு தொகுதிகளாக எழுதி வெளிவந்த சிந்தனை சுரங்கம் என்ற நூலின் முதல் பாகம் மட்டும், தற்போது மறுபதிப்பாக வந்துள்ளது. மேலைநாட்டு, இந்திய நாட்டு அறிஞர்கள், தமிழ் இலக்கியங்கள், பழமொழிகள் என, சிந்தனைகளின் அகர வரிசைத் தொகுப்பு, பொருளகராதியுடன் வெளிவந்துள்ளது. சிறப்பான சிந்தனைகளின் தொகுப்பு. எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளது, ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் புலமைக்கு எடுத்துக்காட்டு. […]

Read more

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள்

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள், ஜெகாதா, சபரீஷ் பாரதி வெளியீடு, பக். 128, விலை 80ரூ. ஒரு போர் பற்றிய தகவல்கள் எந்தளவுக்கு பரபரப்பை கிளப்பி விடுகின்றனவோ, அதேபோல்தான், போர் குறித்த புகைப்படங்களும். ஆனால் செய்யதிகளைவிட அவை, மக்களிடம் ஒருவித அச்சத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்துவதில் முன்னிற்கின்றன. அப்படி போர்களில் உயிரை துச்சமாக மதித்து, கேமராக்களுடன் ஓடி, போரின் பாதிப்புகள், மனித உரிமைமீறல்கள், பரிதாபம், கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்த, 50 புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை பதிவு தான் இந்த நூல். அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் […]

Read more