குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள்

குருதிக் களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள், ஜெகாதா, சபரீஷ் பாரதி வெளியீடு, பக். 128, விலை 80ரூ.

ஒரு போர் பற்றிய தகவல்கள் எந்தளவுக்கு பரபரப்பை கிளப்பி விடுகின்றனவோ, அதேபோல்தான், போர் குறித்த புகைப்படங்களும். ஆனால் செய்யதிகளைவிட அவை, மக்களிடம் ஒருவித அச்சத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்துவதில் முன்னிற்கின்றன. அப்படி போர்களில் உயிரை துச்சமாக மதித்து, கேமராக்களுடன் ஓடி, போரின் பாதிப்புகள், மனித உரிமைமீறல்கள், பரிதாபம், கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்த, 50 புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை பதிவு தான் இந்த நூல். அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் போன்ற வல்லரசுகளின் உலகப் போர்கள் துவங்கி, வியட்நாம், ஈராக், இலங்கை, கொரியா, லிபியா, சிரியா, கம்போடியா நாடுகளில் நடந்த போர்களின் முக்கியமான நிகழ்வுகளையும், அங்கு படங்கள் எடுக்கப்பட்டதன் பின்னணியையும் விளக்குகிறது. புகைப்படக்காரர்களை கொன்ற ராணுவத்தினர், குண்டடி பட்டு கீழே விழுந்தும், தொடர்ந்து புகைப்படம் எடுத்த கெஞ்சி நாகை போன்ற கேமரா போராளிகள், ஒரு புகைப்படம் எவ்வாறு வியட்நாம் போரின் போக்கை மாற்றியது என்பது போன்ற செய்திகளையும் இந்த நூல் அடக்கி உள்ளது. -திரு. நன்றி: தினமலர், 26/4/2015.  

—-

பாரதியும் தேசியத் தலைவர்களும், புலவர் சு. சுப்புராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 65ரூ.

பாரதியாருடன் 17 தேசியதலைவர்களை ஒப்பிட்டு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் பாரதி குறித்த சித்திரத்துக்கு வண்ணம் சேர்க்கும் நூல்களில் ஒன்றாக இது அமைந்திருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 22/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *