பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்
பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள், தமிழில்-சா.தேவதாஸ், கருத்து பட்டறை, மதுரை 6, விலை 380ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-192-2.html பாப்லோ நெரூடாவின் பெயர் தமிழ் வாசகருக்கு நன்கு பரிச்சயமானது. அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளியாகிக் கவனம் பெற்றுள்ளன. நெரூடா, பாரதிக்கு நிகரான மகாகவி. இடதுசாரிகளின் வெற்றியைப் பாரதி யுகப் புரட்சி என வருணித்துள்ளான். நெரூடா அந்த இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். நெரூடாவின் அரசியல் நிலைப்பாட்டால் அவர் வாழ்க்கை எப்போதும் நெருக்கடியிலேயே இருந்துள்ளது. இம்மாதிரியான தன் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நெரூடா தன் நினைவுக்குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் உலகில் மகாகவி ஒருவனுடைய வாழ்க்கையை அறிந்துகொள்ள முடிகிறது. சா. தேவதாஸின் மொழிபெயர்ப்பு வாசகருக்கு நெருக்கமாக உள்ளது. நெரூடா உறுதியான அரசியல் கொள்கைகளைக் கொண்டவராக இருந்தபோதும் குழந்தை மனம்கொண்டவராக வாழ்க்கையைக் கொண்டாடியுள்ளார். அவரது ஐலா நீக்ரா வீட்டில் அவர் சேகரித்துவைத்த பொருட்களே இதற்குச் சான்றுகள். நத்தைகளையும், கிளிஞ்சல்களையும், விதவிதமான மர, கற்சிற்பங்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். இப்படியான ஒருவரை ராணுவம் துரத்தியிருக்கிறது. நாடு கடந்து தலைமறைவாக இருந்திருக்கிறார் என நினைக்கும்போது விசனம் ஏற்படுகிறது. நெரூடா ஒரு யதார்த்தவாதி என அவரது அரசியல் அபிமானிகள் சொன்னால், அவர் ஒரு மிகையதார்த்தவாதி என இலக்கிய வாசகர்கள் மறுதலிப்பார்கள். இரண்டும் இல்லை. அவர் கவிஞரே இல்லை எனச் சொன்னவர்களும் உண்டு. பாப்லோ நெரூடா யார் என்பதை இந்நூல் வாசகருக்குச் சொல்கிறது. -உறங்காப்புளி. நன்றி: தி இந்து.