இனி எல்லாம் சுகப்பிரசவமே

இனி எல்லாம் சுகப்பிரசவமே, ரேகா சுதர்சன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 88, விலை 55ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-841-4.html

பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் ரீதியாகவும் மனதளவிலும் தங்களை எவ்வாறு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறும் நூல். இன்றைய நாளில் வழக்கதைக் கூறும் நூல். இன்றைய நாளில் வழக்கொழிந்துகொண்டே வரும் சுகப்பிரசவத்தை நோக்கி பெண்களைத் திசைதிருப்ப நூலின் பெரும்பான்மையான பக்கங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிசேரியன் என்ற சொல்லை துரத்தியடிக்கிற சாகசம், கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் இயற்கையிலேயே இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். கர்ப்ப காலத்துக்கான உடற்பயிற்சிகள், உணவு முறை, தாய்ப்பாலின் அவசியம், சுகப்பிரசவம் போன்ற மருத்துவ ரீதியான விளக்கங்களும், வளைகாப்பு, கிராமத்து உணவுகள், பிரசவம் குறித்த பயம் போன்ற மன ரீதியான செயல்பாடுகளுக்கும் தக்க விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மணமான பெண்களின் கைகளில் கண்டிப்பாக தவழ வேண்டிய நூல். நன்றி: தினமணி, 21/11/11.  

—-

 

வரப்பெற்றோம்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, மு.கோபி சரபோஜி, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 96, விலை 55ரூ. பொருள்புதிது, அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, 15, கலைவாணி நகர், இலாகப் பேட்டை, புதுச்சேரி 605008, பக். 92, விலை 65ரூ. காய்கள் மற்றும் கிழங்குகளின் பயன்கள், ஜெகஜோதி, மகா பதிப்பகம், சென்னை 73, பக்.112, விலை 35ரூ. பூமி என்னும் கோள், ஜார்ஜ் கேமாவ், தமிழில் ஜானகிராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98, பக். 276, விலை 175ரூ. மலரும் புதுயுகம், வேம்பார் இரா. பாண்டியன், பொன்மணி பதிப்பகம், சென்னை 78, பக். 112, விலை 75ரூ. செவ்வியல் இலக்கியச் செழுமை, இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 128, விலை 60ரூ. உங்கள் தமிழ் இலக்கணம், பேரா. க. முத்துச்சாமி, சிந்தியன் பதிப்பகம், சென்னை 35, பக். 256, விலை 150ரூ. மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள், அம்சா பதிப்பகம், சென்னை 61, பக். 144, விலை 60ரூ. இலக்கிய இணையம், (எழுத்தாளர், கவிஞர், இலக்கிய ஆர்வலர் பற்றிய வாழ்க்கை குறிப்பு), பேரா. மு. சாயபுமரைக்காயர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம், 87, தம்பி சாயபு மரைக்காயர் வீதி, காரைக்கால் 609602, பக். 192, விலை 80ரூ. திருமணப் பரிசு, கவிஞர் புவியரசு, வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை மொழிகள், வேலூர் இரா. சுப்பிரமணியசிவம், விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் 1, பக். 128, விலை 65ரூ. நன்றி: தினமணி, 21/11/11.

Leave a Reply

Your email address will not be published.